பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

1. பொது வரலாறு

33


சிறு பூக்கள்

வ்வாறு கொலை, கொள்ளை, மர்மம் ஆகிய விறு விறுப்பூட்டும் நிகழ்ச்சிகளைக் கொண்டு வீசிய சுழல் வேகப் புயற்காற்றினிடையே சில கதைகள் தமிழ் நாட்டுக் குடும்ப வாழ்வின் படமாக, தமிழ்ப் பண்பாட்டை அடக்கமாக நினைப்பூட்டுவனவாக எழுந்தன. இலக்கியத்துக்குரிய தகுதி யாகிய மட்டத்தை எட்டவில்லை என்றாலும், எங்கும் காட்டுத் தீயைப் போலப் பரவிய பரபரப்புச் சூழலினிடையே சிறு பூக்களைப்போல அவை மலர்ந்து மணந்தன. எஸ். ஏ. ராமசாமி ஐயர் என்பவர் எழுதிய சாரதாம்பாள் சரித்திரம், வத்ஸலா என்பனவும், வரகவி திரு அ. சுப்பிரமணிய பாரதியார் எழுதிய ஜடாவல்லவரும், வ.ரா. எழுதிய சுந்தரி அல்லது அந்தரப் பிழைப்பு என்ற சீர்திருத்த மனப்போக்கைக் காட்டும் நாவலும், எஸ். ஜி. ராமாநுஜலு நாயுடு எழுதிய பரிமளா முதலியவைகளும் இந்த வகையைச் சேர்ந்தன: சிறந்த புலவராகத் திகழ்ந்த வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரும் மறைமலையடிகளும் சில நாவல்களை எழுதினர்.

மொழிபெயர்ப்பு நாவல்கள்

பாரதநாடு எங்கும் உரிமை வாழ்வுக்கான போராட்டம். தொடங்கியது. திலகருடைய தலைமையின் கீழ் அமைதியான அளவில் இருந்த இந்தப் போராட்டமும் சுதந்தர உணர்ச்சயும் காந்தியடிகள் அரசியல் வானத்தில் தோன்றியவுடன் பன்மடங்கு அதிகமாயின. மக்கள் உள்ளத்தில் எங்கணும் எழுச்சி உண்டாயிற்று. இந்திய நாடு, இந்தியப் பண்பாடு, இந்தியக் கலைகள் என்ற அன்பும் அவற்றை வளர்க்க வேண்டும் என்ற ஆர்வமும். வளர்ந்தன. மக்களுக்குத் தேசியப் போராட்டச் செய்திகளைத் தெரிவிக்கப்

3