பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

தமிழ் நாவல்

பத்திரிகைகள் உதவின. நாள் இதழ்களும் வார இதழ்களும் திங்கள் இதழ்களும் தேசீய உணர்ச்சியுடன் செய்திகளை வெளியிட்டன; தலைவர்களின் சொற்பொழிவுகளைத் தாங்கி வந்தன; மக்கள் பத்திரிகைகளை வரவர மிகுதியாகப் படிக்கத் தலைப்பட்டனர்.

'நம்முடைய பாரத நாட்டுப் பொதுவான மொழி ஒன்று வேண்டும், அது ஹிந்தியாகத்தான் இருக்க முடியும்' என்று காந்தியடிகள் சொன்னார். அதனால் ஹிந்தி மொழியைத் தென்னாட்டிலும் பரப்ப வேண்டும். என்ற முயற்சி தொடங்கியது. பலர் ஹிந்தி மொழியைக் கற்றார்கள். அந்த மொழியில் பழையகால இலக்கிய வளம் இல்லாவிட்டாலும், புதிய இலக்கியங்கள். எழுந்தன. பிரேம்சந்த் முதலியவர்கள் நல்ல நாவல்களை எழுதினார்கள். தமிழ் நாட்டில் புதிதாக விந்தியைப் படித்தவர்கள் அந்த நாவல்களைப் படித்து இன்புற்றார்கள், காந்தி மகாத்மா சொன்ன எதற்கும் தனி மதிப்பு உண்டாயிற்று. அவர் சொல்லிவிட்டார், ஹிந்துஸ்தானி நம்முடைய பொது மொழியென்று என்ற மதிப்பினால் ஹிந்தியை அபிமானத்துடன் கற்றார்கள். தமிழில் எழுத வல்லவர்கள் பிரேம்சந்த் முதலியவர்களின் நாவல்களைத் தமிழில் மொழிபெயர்த்துத் தந்தார்கள்.

1920-ஆம் ஆண்டுவாக்கிலே சிறு கதை தமிழ் நாட்டில் தோன்றியது. அது முதல் அது. சுறுசுறுவென்று பற்றிக் கொண்டது. எழுத்தாளர் யாவருமே சிறு கதைகளை எழுதத் தலைப்பட்டனர். பத்திரிகைகள் சிறு கதைகளை நிரம்ப வெளியிட்டன. ஹிந்திச் சிறு கதைகளின் மொழி பெயர்ப்புகள் தமிழில் ஏராளமாக வந்தன.

இதே சமயத்தில், வங்க நாட்டின் சிறப்பும், தேசீயப் போரில் அது, முன்னணியில் நின்ற வரலாறும் தமிழ் நாட்டுக்குத் தெரியவந்தன. பங்கிம் சந்திரருடைய ஆனந்த