பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

1. பொது வரலாறு

37

அவர்களை உணர்கிறோம். அவர்கள் விடும் மூச்சு நமக்குக் கேட்கிறது. அவர்களுடைய கோபதாபங்களைப் பரிவுடன் நாம் அறிந்து கொள்கிறோம்.

நாவலை முற்றும் படித்தபிறகு உண்டாகும் நிறைவில், இலக்கிய இன்பத்தில், சுவையில் நாம் அமிழ்ந்து போகிறோம். எளிதில் அதனினின்றும் மீள முடிவதில்லை. ஆம். இதுதானே இலக்கிய இன்பம்? அதனை இந்த நாவல்களிலும் காண்கிறோம், வீணை எல்லா இசைக் கருவிகளிலும் சிறந்ததென்று சொல்கிறோம். ஏன்? வயலினை ஒருவன் வாசிக்கிறான். அவன் வில்லை எடுத்து விட்டால் அதன் ஒலி நின்று விடும், புல்லாங்குழலை ஒருவன் ஊதுகிறான். அவன் வாயிலிருந்து அதை எடுத்து விட்டால் இசையொலி நிற்கிறது. ஆனால் வீணையை ஒருவன் மீட்டிக் கொண்டிருக்கிறான். ஒரு மீட்டு மீட்டி விரலை எடுத்து விடுகிறான். அதன் பின்பும் அதன் இன்னொலி இழையோடுகிறது. அந்தக் கார்வையிலே உள்ள இன்ப அலைக்கு ஈடாக எதைச் சொல்வது? அது போலத்தான் சிறந்த இலக்கியங்கள், காவியமாகட்டும், சிறுகதையாகட்டும், நாவலாகட்டும், படிக்கும் போது இன்பம் உண்டாக்குவதன்றிப் படித்த பிறகும் நம் நெஞ்சில் ஊறிச் சுவை ததும்பி மணக்கின்றன. நாவல்களிலும் இந்த இலக்கியச் சுவையை நுகர்வதனால் தான், 'நல்ல நாவலென்பது உரை நடையில் அமைந்த காப்பியம்' என்று ஒரு மேல் நாட்டு ஆசிரியர் கூறினார்.[1]

இந்த இலக்கியச் சுவையை ரவீந்திரர் நாவல்களிற் கண்டோம். பங்கிம்சந்திரர் நாவல்கள் இந்தச் சுவையை ஊட்டின. சரத்சந்திரருடைய நவீனங்களும் இந்த இலக்


  1. Aana Lactitia Barbauld; Quated in Novelists on the Novels P 48.