பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

தமிழ் நாவல்

இருந்தவை பத்திரிகைகள். இப்போதும் பத்திரிகைகளே இலக்கியப் படைப்புக்களுக்கு ஊக்கம் தந்து வளர்த்து வருகின்றன. இந்தப் பத்துப் பதினைந்து ஆண்டுகளில் வெளியான தமிழ்ப் புத்தகங்களின் கணக்கை எடுத்துப் பாருங்கள். பாடப் புத்தகங்களையும் பெரிய ஆராய்ச்சி நூல் களையும் விட்டு விட்டு ஆக்க இலக்கியங்களை (Creative literature) மட்டும் பார்த்தால் நிச்சயமாக நூற்றுக்கு எழுபத்தைந்து விழுக்காடு பத்திரிகைகளில் வந்து தொகுத்த வையாகவே இருக்கும். இந்தக் கணக்கு எதைக் காட்டுகின்றது? புதிய இலக்கியப் படைப்பில் பத்திரிகைகள் ஆற்றிவரும் தொண்டின் சிறப்பை இந்தக் கணக்கால் உணர்ந்து கொள்ளலாமே.

கல்கியில் தொடர்கதைகள்

மரர் 'கல்கி' கிருஷ்ணமூர்த்தி ஆனந்தவிகடனில் தொடர்கதை எழுதத் தொடங்கினார். கள்வனின் காதலி, தியாகபூமி ஆகியவை வெளியாயின. மற்றப் பத்திரிகைகளிலும் தமிழிலே முதல் முதலாக எழுதிய நாவல்கள் தொடர்கதைகளாக வந்தன். கல்கியவர்கள் தம்முடைய பெயரால் ஒரு தனிப் பத்திரிகையே தொடங்கி நடத்தலானார். அதில் அவர் பெரிய பெரிய நாவல்களை எழுதி வந்தார். கதை விரிவாக அமைவதற்குச் சரித்திர நாவல்கள் வாய்ப்பாக இருக்கும் என்று உணர்ந்தார். சரித்திரத்தை நிலைக்களமாகக் கொண்டு எழுதினால் எவ்வளவு நீளமாக எழுதினாலும் கதையை ஓட்டலாம் என்று அவருக்குத் தோன்றியது. 'பார்த்திபன் கனவு' என்ற சரித்திர நாவலை எழுதப் பிள்ளையார் சுழி போட்டு விட்டார். அதற்காகத் தமிழ் நாட்டு வரலாற்று நூல்களைப்