பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1. பொது வரலாறு

41

படித்தார். அக்காலத்து இலக்கியங்களைப் படித்தார் சரித்திர சம்பந்தமான இடங்களைப் போய்ப் பார்த்தார்.[1] ஒரு சரித்திர மாணவரே ஆகிவிட்டார்.

பல்லவர் வரலாறும், சோழ சரித்திரமும், பாண்டியர் வரலாறும் அவர் படித்தார். கல்வெட்டுக்களிலும். செப்புப் பட்டயங்களிலும் அந்த வரலாறுகளுக்குரிய ஆதாரங்கள் இருப்பதை அறிந்து அவற்றிற் சிலவற்றையும் கண்டார். பல கோயில்களுக்குச் சென்று அவற்றின் சிற்பத்தையும் கட்டிட அமைப்பையும் கண்டு மனத்தைப் பறிகொடுத்தார். இவற்றை வைத்துக் கொண்டு நீண்ட சரித்திர நாவல்களை எழுதலாம் என்ற எண்ணம் அவரிடம் தோன்றி வளர்ந்தது. அதன் விளைவாகத் தோன்றிய முதற் பூவே பார்த்திபன் கனவு. அதைத் தொடர்ந்து தோன்றியது சிவகாமியின் சபதம். பிறகு எழுந்தது பொன்னியின் செல்வன் என்ற பிரம்மாண்டமான நாவல். அது சோழர் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது. இந்த மூன்றும் ஒன்றை விட ஒன்று விஞ்சி அளவிலும் பெரியனவாக அமைந்து விட்டன. வெறும் பக்க அளவைப் பார்த்தாலே இந்த உண்மையைத் தெரிந்து கொள்ளலாம். பார்த்திபன் கனவு - 402 பக்கங்கள்; சிவகாமியின் சபதம் 1011, பக்கங்கள்; பொன்னியின் செல்வனோ 2328 பக்கங்கள்.

பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம் என்ற இரண்டு நூல்களையும் எழுதுவதற்காக அவர் மகாபலிபுரம், அஜந்தா ஆகிய இடங்களுக்குப் போய் வந்த செய்தியைச் 'சிவகாமியின் சபதம்' முகவுரையிலே எழுதியிருக்கிறார். பல ஆண்டுகளாகச் சிந்தித்துச் சிந்தித்து உள்ளத்தில் உருவாக்கி: எழுதியவை அவை இரண்டும் என்பதை அந்த முகவுரையில் பின்வரும் பகுதி தெளிவாக்கும் 'சிவகாமியின் சபதம்


  1. கல்கி: சிவகாமியின் சபதம், முகவுரை.