பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2. மூன்று நாவல்கள்

51

பிரதாப முதலியாருடன் படித்துக் கொண்டிருந்த கனகசபை என்பவன் ஓர் உபாத்தியாயரிடம் வளர்ந்து வருகிறான். அவனுடைய பிறப்பு மர்மமாக இருக்கிறது. பிறகு அவன் பெரிய செல்வரும் பாளையப்பட்டுத் தலைவருமாகிய தேவராஜ பிள்ளையென்பவருடைய மகனென்று தெரிகிறது. அவர் வந்து கனகசபையை அழைத்துச் செல்கிறார்.

ஞானாம்பாள் கருவுறுகிறாள் ஆணாகப் பிறந்தால் தமக்குச் சுவீகாரம் செய்து தரவேண்டும் என்று ஞானாம்பாளின் தந்தையார் சொல்கிறார், பிரதாப முதலியாரின் தந்தையார் அதற்கு இணங்கவில்லை. அதனால் மீண்டும் இருவரிடையேயும் மன வேறுபாடும் பகையும் உண்டாகின்றன. ஞானாம்பாள் தந்தையின் வீட்டில் தனியே இருக்கிறாள். அவள் கருச் சிதைகிறது. பிரதாப முதலியார் ஊரை விட்டு எங்காவது போய்விடலாமென்று இரண்டு வேலைக்காரர்களோடு புறப்பட்டு விடுகிறார். ஞானாம்பாள் அவரைத் தேடி வந்து அவரோடு சேர்ந்து கொள்கிறாள். இருவரும் திருடர்களிடம் அகப்பட்டுக்கொள்ள இருந்த போது, பிரதாப முதலியாருக்கு வேண்டிய ஒருவரால் அந்தப் பயத்தினின்றும் நீங்குகிறார்கள். அப்பால் அவர்கள் தேவராஜ பிள்ளையின் ஊருக்குச் சென்று தங்குகிறார்கள். அவர்களைப் பிரிந்து வருந்திய பெற்றோர்களுக்குத் தேவராஜ பிள்ளை கடிதம் எழுத, யாவரும் அங்கே வந்து ஒன்றுகிறார்கள். மீட்டும் அவர்கள் மன வேறுபாடு நீங்கிச் சமாதானம் அடைகிறார்கள்.

கனகசபை தேவராஜ் பிள்ளையின் சொந்த மகன் என்பதை அரசாங்கத்தார் ஒப்புக்கொள்ளவில்லை. அதற்காக விசாரணை நடைபெறுகிறது. பொல்லாத ஒருவனுடைய வேலையால், விசாரணையில் தேவராஜ பிள்ளைக்கு மாறாகத் தீர்ப்புச் செய்கிறார்கள். சாட்சி சொன்ன