பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2. மூன்று நாவல்கள்

59

இடமாக அமையக் கூடாது. பாத்திரங்களின் இயல்பை உணர்த்தவும் கதையின் வளர்ச்சிக்கு உதவவும் அது பயன்பட வேண்டும்' என்று ஸாமர்ஸெட் மாகம் எழுதுகிறார்.[1] 'கதை அமைப்பினிடையிலே நீதிகள் இழைத்திருக்க வேண்டும்; தத்துவக் கருத்துக்கள் கரைந்திருக்க வேண்டும்; நாவலாசிரியர் ஒரு கணமேனும் பிரசாரம் செய்பவராகவோ உபதேச குருவாகவோ மாறக்கூடாது' என்பது ஹட்ஸனுடைய கருத்து.[2] நாவலைப்பற்றிய தனிப் புத்தகம் எழுதிய ராபர்ட் லிட்டெல் என்பவர் 'நாவலாசிரியன் புதியது படைக்கும் கலைஞன். உபதேசம் செய்வதோ, சீர் திருத்தம் பேசுவதோ அவனுடைய வேலை அன்று’[3] என்கிறார். இந்தக் கருத்தை அழுத்தந் திருத்தமாக ஃபோர்டு மேடக்ஸ் ஃபோர்டு என்பவர் சொல்லுகிறார்; 'நாவலை வைத்துக்கொண்டு எது வேண்டுமானாலும் செய்யலாம்; வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் புகுந்து ஆராயலாம்; சிந்தனையுலகத்தின் பகுதிகளிற் புகுந்து ஆராய்ச்சி செய்யலாம். ஒன்று மாத்திரம் செய்யவே கூடாது; எந்தக் காரணத்தைக் கொண்டும் ஆசிரியன் என்ற முறையில் பிரசாரம் செய்யக்கூடாது.' என்பது அவர் கூற்று.[4]

உப கதைகள்

டைப்பிறவரல்களாக வரும் கதைகள் தனியாகப் படிக்கும்போது சுவை தருவன. ஆனாலும் நாவலினிடையே அவை தொடர்பின்றி நிற்கின்றன. எத்தனையோ நகைச்


  1. Somerset Maugham: The Technique of Novel writing.
  2. Hudson: An Introduction to the study of Literature.
  3. Robert Liddel; A Treatise on the Novel, p; 50.
  4. Ford Madox Ford (1924): Quoted in Novelists on the Novel, p. 102.