பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

தமிழ் நாவல்



சுவைத் துணுக்குகளும் சிறியதும் பெரியதுமாகிய கதை களும் அங்கங்கே திணிக்கப் பெற்றிருக்கின்றன. இரண்டா வது அத்தியாயமாகிய "பாலலிலே' என்பது முழுவதும் பிரதாப முதலியார் தம் இளமையிற் செய்த செயல்களேச் சொல்கிறது; பாத்திரப் படைப்புக்கு உதவுகின்ற செயல்கள் அல்ல அவை; படிக்கிறவர்கள் பொழுது போக்க அமைந்த வேடிக்கைத் துணுக்குகள். அவற்றைச் சொல்லுவதற்கு முன் கதாநாயகர், என்னுடைய பாலிய சேஷ்டைகள் யாவருக்கும் வியப்பாயிருக்குமானதால். அவைகளே அடியில் விவரிக்கிறேன் என்று தோற்றுவாய் செய்கிரு.ர். சில எடுத்துக்காட்டுக்களைச் சொல்கிறேன்.

'தினமும் பொழுது விடிந்தவுடனே உபாத்தியாயர் வந்து படிக்கச் சொல்லித் தொந்தரவு செய்தபடியால் பொழுது விடியாமல் இருப்பதற்கு என்ன உபாயமென்று யோசித்துப் பார்த்தேன். கோழி கூவிப் பொழுது விடிகிற படியால், கோழி கூவாவிட்டால் பொழுது விடியாதென்று கினேத்து, கோழி வளர்க்க வேண்டாமென்று அக்கம்பக்கம் வீட்டுக்காரர்களுக்கு உத்தரவு செய்தேன்'

'கான் ஒரு நாள், கண்ணுடியில் என் முகத்தைப் பார்த்த பிறகு, முதுகின் அழகைப் பார்க்கும்பொருட்டு, கண்ணுடியை எனக்குப் பின்புறத்தில் வைத்து, முதுகாலே பார்த்தேன்; ஒன்றும் தெரியாமல் மயங்கினேன்." -

ஒரு நாள் பிரதாப முதலியாரும் அவருடைய தோழர் கனகசபையும் வேறு சில பிள்ளைகளும் சிலம்பம் விகளயாடிக் கொண்டிருந்தார்களாம். இராத்திரி கெடு நேரம் விளையாடிவிட்டு வீட்டிக்கு வரும்போது வழியில் ஒரு வெளியில் கூத்தாடிகள் இராம நாடகம் ஆடிக் கொண் டிருந்தார்கள். இராமரும் இலக்குவனும் சீதையும் காட்டுக்குப் போகிற சமயம், அப்போது தசரதர்.

1. o. 6-12. 2. 1s. 7. 3. L. 8, 4.4. 9.