பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2. மூன்று நாவல்கள்

75

கொண்டிருந்த அதிகாரிகள், ஸ்ரீநிவாசன் அவனைப் போன்ற அங்க அடையாளம் உள்ளவனாக இருந்தமையால் அழைத்துச்சென்று சிறைப்படுத்தி விடுகிறார்கள். விசாரணையில் அவன் விடுதலை பெற்றுச் சிதம்பரம் சென்று கமலாம்பாள் முதலியோர் வந்து காசி போனதை அறிந்து நண்பனுடன் அவனும் காசியை அடைகிறான்.

காசிக்குச் சென்று முத்துசாமி ஐயர் அங்கே தாம் இழந்த பிள்ளையைக் காண்கிறார். பேயாண்டித் தேவனும் மனம் திரும்பி வந்து குழந்தையை எடுத்துச் சென்று ஒருவருக்கு விற்றுவிட்ட செய்தியைச் சொல்கிறான். அவர் பங்குகொண்ட வியாபாரத்தில் மோசடி செய்த இருவரையும் கண்டுபிடித்து அந்தப் பொருளையும் அவன் அவரிடம் ஒப்பிக்கிறான். காசியில் இருந்த கமலாம்பாள் முதலியோர் சுவாமிகளின் பெருமையைக் கேட்டுத் தரிசனம் செய்ய வருகிறார்கள்! முத்துசாமி ஐயரைக் காண்கிறார்கள். ஸ்ரீநிவாசனும் வந்து சேர்கிறான். பிரிந்தவர் யாவரும் கூடிச் சுவாமிகளுடன் சிறுகுளம் வருகிறார்கள். சுவாமிகள் முத்துசாமி ஐயரை இல்லறத் துறவியாக இருக்கும்படி அருள் செய்து புறப்படுகிறார். கமலாம்பாள் ராமத்தியானத்தில் மூழ்குகிறாள்.

இதுவே கமலாம்பாள் சரித்திரத்தின் சுருக்கம்.

கதையின் வளர்ச்சி

தைப்பின்னல், பாத்திரப் படைப்பு, உரையாடல்கள், கதையின் சிக்கல் மெல்ல மெல்ல வளர்ந்து பின்பு அவிழ்தல் ஆகியவை மிகச் சிறப்பாக அமைந்துள்ளன. கமலாம்பாளின் குடும்பத்தின்மேல் பொருமை கொண்ட பொன்னம்மாளுக்கு அந்தப் பொறாமை வளர்வதற்குரிய நிகழ்ச்சிகள் ஒன்றன்பின் ஒன்றாக கடக்கின்றன. அதனால்