பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

தமிழ் நாவல்

சுப்பிரமணிய ஐயர் வழக்கில் தம் கடமையைச் செய்யாமல் போக, முத்துசாமி ஐயர் பேயாண்டித் தேவனுடைய பகைக்கு ஆளாகிறார். அதனால் குழந்தையை இழக்கிறார். சுப்பம்மாள் கூனியைப் போலக் கோள் சொல்லப் பொறாமைத் தீ, கொழுந்துவிட்டு எரிகிறது. கதையில் நல்லவர்களுக்குத் தீங்கு செய்யும் பகைவர் கூட்டத்தின் தலைவி பொன்னம்மாள்; அவளுக்குத் துணையாகச் சுப்புவும், நாகுவும், ஈசுவர தீட்சிதரும், சங்கரியும் இருக்கிறார்கள். கமலாம்பாள் மேல் அபவாதம் கூறும் நிகழ்ச்சி தான் கதையின் முக்கியமான திருப்பம். அதிலிருந்து முத்துசாமி ஐயர் குடும்பம் கலைகிறது. பிறகு உண்மை வெளியாகி யாவரும் கூடுகிறார்கள்.

கதையின் ஆரம்பம் நடு முடிவு எல்லாம் இயல்பாகவும், கச்சிதமாகவும் அமைகின்றன. இறுதியில் பேயாண்டித் தேவன் வியாபார மோசடிக்காரர்களைக் கண்டுபிடித்து, அவர்களிடமிருந்து பொருளை வாங்கிவந்து முத்துசாமி ஐயரிடம் கொடுப்பது மாத்திரம் மற்ற நிகழ்ச்சிகளைப் போல இயல்பாக அமையவில்லை. மற்ற நிகழ்ச்சிகள் யாவும் இதற்கு இதுதான் விளைவு, வேறு இருக்க நியாயம் இல்லை என்று நம்பும் வகையில் பொருத்தமாக அமைந்து, கதையின் முழுமைக்கும் பிகுவுக்கும் துணை செய்கின்றன.

முத்துசாமி ஐயர்

பாத்திரங்களை இனம் கண்டு கொள்ளும்படி உருவாக்கியிருக்கிறார் இந்த ஆசிரியர்.

முக்கியமான பாத்திரம் முத்துசாமி ஐயர். அவர், பெருந்தன்மை உடையவர். பிறருக்கு உபகாரம் செய்யும் சிந்தை உடையவர். பக்தியிற் சிறந்தவர். வேதாந்த மனோ பாவம் உடையவர். தமக்குத் தவறு செய்கிறவர்களை