பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2. மூன்று நாவல்கள்

77

மன்னிக்கும் இயல்பு பெற்றவர். சகோதர பாசமும் மனைவியிடமும் குழந்தைகளிடமும் - அன்பும் உடையவர். பொல்லாதவர்களைக் கண்டால் தூரவிலகும் மனம் படைத்தவர். பெரியவர்களுக்கு மதிப்புத் தருகிறவர். இலக்கியத்தையும் இசையையும் அநுபவிக்கிறவர். உணர்ச்சி வசப்படுவர். துயரம் தாங்காமல் மூர்ச்சை போட்டு விழுபவர்.

அவருக்கு உலக வாழ்வில் சலிப்பு உண்டாகி இறுதியில் நிஷ்டான பூதிமானாக மாறுகிறார். அவருடைய துறவு முதிர்வதற்குரிய நிகழ்ச்சிகள் மெல்ல மெல்லக் கதையில் - ஒன்றன்பின் ஒன்றாக வருகின்றன. தம் தம்பி சகோதர விசுவாசத்தை மறந்ததை அறிந்து அவருக்கு வருத்தம் உண்டாகிறது. ஊரார் தெய்வமாக மதிக்கும் அவரை வைத்தியநாதன் வாய்க்கு வந்தபடி பேசுகிறான். அதனால் அவருக்குச் சினம் மூள்கிறது; பிறகு அடங்குகிறது. ஊரார் அவனை அடிக்க, அவர்களிடம் மன்றாடி அவனை விடுவிக்கிறார்.[1] அவர் தம்பி வழக்கைக் கெடுத்து, விட்டதனால் அவருக்கு உண்டான சலிப்பு வளர்கிறது. பேயாண்டித் தேவனால் தமக்குச் சீக்கிரம் ஏதாவது தீங்கு வருவது நிச்சயம் என்ற பயம் மனத்தைக் கலக்க, தம் தம்பியின் நடத்தை அருவருப்பை உண்டாக்க, கொஞ்சமும் தம் சித்தம் தம்மிடம் இல்லாமல் திரும்பி ஊருக்கு வந்து சேர்ந்தார். வீட்டுக்கு வந்தவுடன் கமலாம்பாள் மலர்ந்த, முகத்துடன் அவரை உபசரித்தும், அவர் அவளுடன் முகம் கொடுத்துப் பேசாமல், "இதென்ன. உலகம்? சீ. இதில் உயிர் வாழ்வதைக் : காட்டிலும் நாக்கைப் பிடுங்கிக் கொண்டு பிராணனை விட்டுவிடலாம்" என்று இவ்விதம் சலித்துக் கொண்டிருந்தார்' என்று அவருடைய மன நிலையைச் - சொல்கிறார்[2] ஆசிரியர். குழந்தை காணாமற் போகிறது. நர பலியிட்டுவிட்டார்கள் என்பதை


  1. 1. ப 102.3.
  2. 2. ப. 108.