பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

தமிழ் நாவல்

தால் உலகை நிரப்பி எங்கும் பரவி, எல்லோரையும் திருப்தி செய்து பகவதாராதன மங்களகாரியாதிபனாய் விளங்கிற்று, மிருகங்கள் தத்தம் வைஷம்யங்களை மறந்து வாலை உயர்த்தி நாலு காலாலும் துள்ளித் துள்ளி ஓடின. கேவலம் மனிதனுங்கூடத் தரையையே மோந்து தரையையே பார்க்கும் பன்றிப் பார்வையை விட்டு மேல் நோக்கி மதிமயங்கி, அன்பெனும் ஆறு கரையது புரள நன்புலன் ஒன்றி நாதவென்று அரற்றி....... அருமையில் எளிய அழகே போற்றி, கருமுகிலாகிய கண்ணே போற்றி என்று போற்றிப் போற்றித் துதித்துக் கொண்டாடினான்....’[1]

அநுபூதிமான் கவியாக மாறிச் சொன்ன அற்புதச் சுவை நிரம்பிய வாக்கியங்கள் இவை.

முத்துசாமி ஐயருடைய அநுபவத்தில் தம்முடைய அநுபவத்தை ராஜம் ஐயர் வெளியிடும் மற்றோரிடத்தைக் கேளுங்கள்:

‘அவர் ஆகாயம், காற்று, மேகம், கடவுள் இவற்றை யெல்லாம் பற்றிப் பேசியும் - அவருடைய உள்ளத்தின் ஆரவாரக் கொதிப்பு அடங்கவில்லை. இவ்விதம் சிறிது நேரம் அவருக்கு அசாத்தியமான பரபரப்பு இருந்தது. பிரமாதமான மனப்பசி ஒன்று உண்டாயிற்று. இப்படிச் சில நிமிஷங்கள் கழிந்த பிறகு, அப் பரபரப்பு முற்றும் அடங்கி ஒருவித ஆனந்தம் அவருக்கு ஜனித்தது. நிஷ் காரணமான குதூகலம் ஒன்று அவர் உள்ளத்தில் பிறக்க, அவருக்குக் கண்மூடிவிட்டது. பேச்சு ஒழிந்து மௌனம் குடிகொண்டது. மனத்தில் தாம் அதுபவிக்கும் எண்ணம் ஒன்று தவிர மற்ற நினைப்பு அனைத்தும் இறந்தது. வெளியில் பார்க்கப்படும் பொருள்கள் எல்லாம் கொஞ்சமும் மனத்தில் பதியவே இல்லை. அவர் ஏதோ வெளியில் கலந்து ஒன்றுபட்டாற்போல அவர் மனம் அகண்டா


  1. 1. கமலாம்பாள் சரித்திரம், ப, 152, 153.