பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. மூன்று நாவல்கள்

83

துரண் பிளந்து தோன்றிய அங்கும் இருக்கக் கண்டு, திசை திறந்து அண்டம் கீறிச் சிரித்த செங்கட்சியத்தைக் கண்டு கைகூப்பி, ஆடிப்பாடி அரற்றி. உலகெலாம் துள்ளித் துகைத்த இளஞ்சேய் ஒப்ப, யாமும் ஆடிப் பாடி ஒட வேண்டும் என்பதேயன்றி வேறு அன்று' என்று எழுதி யிருக்கிரு.ர்.

ராஜம் ஐயர் சரிதையை எழுதிய ஏ. எஸ். கஸ்தூரி சங்க ஐயர் என்ற பெரியார், இக் கதை, உண்மையை உணர உள்ளபடி விடாது பாடுபட்டுத் தத்தளித்துக் கொண்டிருந்து, முடிவில் மோட்ச தாகம் தீரப் பருகும் படியான தடாகத்தைக் கண்டு நீர் பருகிக் களைப்புத் தீர்ந்த ஓர் சுத்த ஆத்மாவின் அநுபூதி பேதங்களே அடக்கியுள்ளது என்பது ராஜம் ஐயரே இக் கமலாம்பாள் சரித்திரத்தைப் பற்றி வெளியிட்டுள்ள அபிப்பிராயம்' என்று குறிக்கிருர் .

கமலாம்பாள்

முத்துசாமி ஐயருடைய மனேவியாகிய கமலாம்பாள் அடுத்தபடி தலைமைபெறும் பாத்திரம். கற்பிற் சிறந்த காளிகையாகிய அவள் தன் கணவனேடு வாழ்வத ற்கு எதையும் தியாகம் செய்யும் தன்மையை உடையவள். அயலார் பிள்ளையைத் தன் பிள்ளைபோல ஊட்டி வளர்க்கும் ஒப்பிலா மாமணி. பிறருக்கு அன்பு செய்து அடக்கமாகவும் பணிவாகவும் ஒழுகும் திறத்தினள். கணவனேடு அன்பும் இன்பமும் பொங்கப் பேசி மகிழ் வித்து மகிழும் பண்பினள். கணவனுடைய பிரிவிலே துடிதுடித்துப்போகும் மென்மயில். இசைக் கலையில் வல்ல அணங்கு. பொல்லார் குழுவில் சேர்ந்து புனிதத்தை

1. ப. 205 . . . . . - -

3. ராஜம் அய்யர் சரிதை, ப. 7.