பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

தமிழ் நாவல்

§4. தமிழ் காவல்

இழவாத தூய்மையுடையவள். இவளும் தனக்கு வந்த இன்னல் என்னும் தீயிலே எரிந்து குலேந்து வருந்திப் புடமிட்ட பொன்னகப் பக்குவம் பெறுகிருள். துன்பம் வந்தபோது ராம நாம ஸ்மரணை செய்து ராம தரிசனத்தைப் பெற்று எங்கும் ராமனய் எதுவும் ராமய்ைப் பார்க்கும் உயர்நிலையை அடைகிருள். தன் கணவரைக் கண்டு. விட்டால் பூநீராமனேயே பிரத்தியட்சமாய்க் கண்டதுபோல் கினேப்பு. அவருடன் பேசினால் ராமனுடன் பேசுவதாய். மதிப்பு. அவர் அருகு இருந்தால் ரீ ராமணருகு இருப்ப தாகக் களிப்பு. அவர் நடையையும் அவர் சிரிப்பையும் காணுந்தோறும், "கடந்தரு மதங்கலும் களில் யானே போல், கடந்தது கிடந்ததென் உள்ளம் கண்ணியே' என்றும், 'முந்திஎன் உயிரை அம் முறுவல் உண்டதே' என்றும் ராமனேக் கண்ட சீதையைப்போல் தன்னுள் பாடி மகிழ்ந்து துதித்து. ராமத்தியானனந்த வைபவத்தில் மூழ்கி: யிருக்கிருள்."

அம்மையப்ப பிள்ளை

கமலாம்பாள் சரித்திரத்தைப் படிப்பவர்கள் கதா காயகரையும் கதாநாயகியையும் மறந்தாலும் தமிழ் வித்துவான் அம்மையப்ப பிள்ளையை மறக்க முடியாது, உலகத்தோடு ஒட்ட ஒழுகத் தெரியாத அந்த அப்பாவி மனிதருடைய முழுப் பெயர் என்ன தெரியுமா? கடல் சூழ்ந்த இக் கிலவலயத்திற்கு ஓர் திலகம் போன்ற ஆடுசா பட்டியில் அவதரித்த அண்டர் புகழும் அஷ்டாவதானம் அருந்தமிழ்ப் புலவர் மகாவித்துவான் அம்மையப்ப பிள்ளை யவர்கள். நிலவலயத்திற்குத் திலகப் போன்ற ஆடுசா பட்டி ஜக்தாறு வீடுகளும் ஒரு புளிய மரமும் உள்ள ஒரு பெரிய பட்டணம் மதுரை ஜில்லா ஸ்கூலில் ஒரு

1. ш. 202-3. 2, Li. 43. 3. ւ ա. 40.