பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயிற்றலின் அடிப்படை விதிகள் 77

யானவை. ஆதலால் பொருளே எளிதாக அறிய முடிகின்றது. உண்டிலன் என்பது ஒரே சொல்லாக இருப்பினும் அதில் * உண்ணுதல் என்ற வினையும், ‘ட்‘ என்ற இறந்த

காலத்தை உணர்த்தும் இடை நிலையும், "இல்" என்ற எதிர்

மறைப் பொருளைப் பயக்கும் இடைநிலையும், அன்’ என்ற உயர்திணை ஆண்பாலே உணர்த்தும் விகுதியும் ஒட்டி நின்று' இலக்கண வேறுபாட்டுடன் பொருளே உணர்த்தி நிற்கின்

றன. இவற்றை மாணுக்கர்கள் உணர்வது கடினம். மொழி நூலார் முதல் வீாக்கியம் மொழியின் தனி நிலையைக்

(isolation stage) குறிக்கின்றது என்றும், இரண்டாவது: வாக்கியம் மொழியின் ஒட்டுநிலையை (agglutination stage). உணர்த்துகின்றது என்றும் கூறுவர். இக்கருத்துக்களே

மாணுக்கர்களுக்குப் படிப்படியாகக் கற்பித்தல் வேண்டும்.

தெளிவிலிருந்து சிக்கலுக்குப் போதல் (From the simple to the complex) : ஒரு துறையில் ஒருவருக்கு எளிதாக இருப்பது அத்துறையை அறியாத மற்ருெருவருக்கு அரிதாக இருத்தல் கூடும். ஒரு துறையில் சிறிது கற்றவர் நிலை வேறு ; ஒரு சிறிதும் கல்லாதவர் நிலை வேறு. எனவே, குழந்தைகளின் அறிவு நிலையை யொட்டிக் கற்பித்தல் தொடங்கவேண்டும். மொழிப் பாடங்களைக் கற்பிப்பதில் அன்ருட வாழ்க்கையை யொட்டிய நிகழ்ச்சிகளைக் கொண்டு பாடங்களைத் தொடங்குதல் வேண்டும். அப்பம் என்ற சொல்லே இளஞ் சிருர்கள் நன்கு அறிவர் : அச்சொல் குறிக்கும் பொருள் அவர்களால் பிரியமாக உண்ணப்படுகின்றதல்லவா? இங்குத் தெளிவு என்பது குழந்தைகள் பட்டறிவால் அறிந்தவற்றைக் குறிக்கின்றது. அப்பம் குழந்தைகளின் பட்டறிவில் கண்ட பொருள். இப்பொருளே அப்படியே சொல்லால் எழுதிக் கற்பித்தல் எளிது. இச் சொல்லிலுள்ள அ, ப், ப, ம். என்ற நான்கு எழுத்துக்களையும் தனித்தனியாகக் கற்பித்தல் அரிது; அவ்வொலிகளைக் குறிக்கும் குறியீடுகள் மாணுக்கரின் பட்டறிவுக்கு அப்பாற்பட்டவை ; அவர்களுக்கு அவை 'சிக்கலாகக் காட்சியளிப்பவை. முழுதிலிருந்து பகுதிக்குப் போதல் என்ற குறிப்பும் இக்குறிப்பும் கிட்டத்தட்ட ஒன்றே என்று கொள்ளலாம்.