பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*78 தமிழ் பயிற்றும் முறை

தெளிவற்றநிலையிலிருந்து தெளிவானநிலைக்குப் போதல் (From the indefinite to the definite) : Ggpsstili LG su šéfisb அறிபவை யாவும் தெளிவற்ற நிலையிலேயே இருக்கும். உணர்த்தும் செய்திகளும் உச்சரிக்கும் சொற்களும் சரியாக இரா. இவற்றைச் செம்மையுறச் செய்வதே கற்பித்தலின் நோக்கமாகும். ஓரளவு இவை செம்மை யடைந்த பிறகு குழந்தைகளின் அறிவை அடிப்படையாகக்கொண்டு புதியனவற்றைக் கற்பிக்கும்பொழுது ஆசிரியரின் நோக்கம் தெளிவாக இருத்தல் வேண்டும். குழந்தைகட்குப் பொருளற்ற வெற்ருெலிகளைக் கற்பித்தல் வீணே ; அவர்களறியாத பொருள்களைக் கற்பித்தல் யாவும் குழந்தைகட்கு வெற்ருெலிகளாகவே தோன்றும். இன்று நம் நாட்டுப் பள்ளிகளில் வெற்ருெலியாகக் கற்பித்தலே அதிகமாக நடைபெறுகின்றது. அழகிய ரோஜா மலரைக் காணும் குழந்தைக்கு அதில் இதழ்கள், மகரந்தக்குழல்கள், மகரந்தப்பைகள் முதலிவை இருப்பது புலப்படாது. ஊன்றிக் கவனிக்கச் செய்தால்தான் அவை இருப்பது புலப்படும். அப்பொருள்களைக் காட்டினுல்தான் அவற்றைக் குறிக்கும் சொற்களின் பொருள் நன்கு விளங்கும். இல்லாவிட்டால் அச் சொற்கள் குழந்தைகளின் மனத்தில் யாதொரு கருத்தையும் உணர்த்தா , பொருள்கள், படங்கள், விளக்கப் படங்கள் போன்ற கற்பிக்கும் சாதனங்களைக் கொண்டும் தெளிவான மொழியைக் கையாண்டும் குழந்தைகளின் மனத்தில் தெளிவான கருத்துக்களே ஏற்றலாம். இன்றைய நிலையில் பெரும்பாலும் கற்பித்தல் வறட்சியாகவே உள்ளது; பொருளறியாது விதிகளையும் பிறவற்றையும் மனப்பாடம் செய்யும் நிலை அதிகமாக அமைந்துள்ளது.

இவற்றைத் தவிர, கற்பித்தல் இயற்கையை யொட்டிச் செல்லவேண்டும்; குழந்தைகளின் உளநிலையை யொட்டியும் மன வளர்ச்சியை அனுசரித்தும் இருத்தல்வேண்டும். காரண காரிய முறைப்படி இருத்தல் வேண்டும் என்று எண்ணுதல் தவறு. கற்பித்தல், விதிவருவித்தல் முறையை யொட்டியும்