பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயிற்றலின் அடிப்படை விதிகள் 79

இருக்கவேண்டும். ஆளுல், சில இடங்களில் விதிவிளக்கு முறையைப் பயன்படுத்தவும் செய்யலாம். மேலே காட்டிய குறிப்புக்கள் யாவும் வளர்ச்சி பெறும் மனத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டு எழுந்தவை; அவை குழந்தையின் மனப்பான்மையை யொட்டிக் கற்பிக்கவேண் டும் என்ற கருத்தை வலியுறுத்துபவை. அன்றியும், அவை கற்றுத்துறைபோய ஆசிரியர் கற்பிக்கும் பாடத்தில் குழந்தை கட்குக் கற்பிக்க வேண்டியவற்றை ஒரு முறைப்படி ஒழுங்கு படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை வற்புறுத்துபவை. பகுக்கவேண்டிய இடத்தில் பகுத்தும், தொகுக்க வேண்டிய இடத்தில் தொகுத்தும் முறைகளை இடத்திற்கேற்றவாறெல்லாம் மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதையும் அவை நினைவூட்டுகின்றன. இவை யாவற்றையும் மறை மொழிகள் என்று அப்படியே கொள்ளவேண்டும் என்பதில்லை. கற்பித்தல் துறையில் புதிதாகப் புகும் இளைஞர்கட்கு இவை நல்ல வழிகாட்டிகளாகவும் உதவும். ஆனல், பட்டறிவு மிக்க ஆசிரியர்கட்கு இவை அதிகம் பயன்படா; இவை யாவும் அவர்களின் குருதியுடன் ஏற்றவாறு ஊறியுள்ளன ; அன்ருடப் பயிற்றலில் இவை அவர்களறியாமலேயே அவர்கட்கு வந்து உதவும் குறிப்புக்களாகவும் அமைந்து விடுகின்றன.