பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயிற்று முறைகள்.(1) 8 .

லிருந்தும் நன்னூல் பொதுப்பாயிர நூற்பாக்களிலிருந்தும் அறிந்துகொள்ளலாம்.

பயிற்று முறையைக் குறித்து நச்சிஞர்க்கினியர் காட்டும்,

ஈதல் இயல்பே இயல்புறக் கிளப்பின் பொழிப்பே அகலம் நுட்பம் எச்சமெனப் பழிப்பில் பல்லுரை பயின்ற நாவினன் புகழ்ந்த மதியிற் பொருந்தும் ஒரையில் திகழ்ந்த அறிவினன் தெய்வம் வாழ்த்திக் கொள்வோன் உணர்வகை அறிந்தவன் கொள் வரக் கொடுத்தல் மரபெனக் கூறினர் புலவர்.: என்ற மேற்கோள் நூற்பாவினல் அறியலாம். நன்னூலாசிரியரும் பாடம் சொல்லுதலைப்பற்றி, ' ஈதல் இயல்பே இயம்பும் காலைக் காலமும் இடனும் வாலிதின் நோக்கிச் சிறந்துழி இருந்துதன் தெய்வம் வாழ்த்தி உரைக்கப் படும்பொருள் உள்ளத் தமைத்து விரையான் வெகுளான் விரும்பி முகமலர்ந்து கொள் வோன் கொள்வகை அறிந்து அவன் உளங்கொளக் கோட்டமில் மனத்தின்நூல் கொடுத்தல் என்ப :

என்று கூறுகின்ருர். காலமும் இடனும் என்பதைத்தான் gošârşogāgārī ‘go sh; (5psáāb’ (Proper environment) என்று கூறுவர். உரைக்கப்படும் பொருள் உள்ளத்

தமைத்தல் என்பது பாட ஆயத்தத்தைக் (Lessonplanning) குறிக்கும். கொள்வோன் கொள்வகை அறிந்து ’ என்பது ஹெர்பார்ட் கூறும் மனத்தைத் தயாரித்தல் ’ (Preparation) என்ற படியில் அடங்குகின்றது.

இவ்விடத்தில் மேற்குறிப்பிட்ட இரண்டு நூற்பாக்களிலும் (6-வது வரியில்) முறையே உள்ள உணர்வகை ,

  • பயிற்று முறையை ஈதல் இயல்பு என்று பண்டை யோர் குறிப்பிடுவர்.
  • நன்னூல்-நூற். 38.

த-7