பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயிற்று முறைகள்.(1) 83

வற்றை மறுநாள் ஒப்புவிக்கச் செய்வது, அன்று கற்பித்தவற்றைத் திரும்பக் கூறச் செய்வது முதலியவை நடை முறையில் மேற்கொள்ளப்பெற்ற முறைகளாகும். இலக்கணப் பாடம் விதிவிளக்கு முறையில் கற்பிக்கப்பெற்றது ; அது தனிப் பாடமாகவே கற்பிக்கப்பெற்றது. எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்ற முறையில் இலக்கணம் கற்பித்தல் நடைபெற்றது. சிறு வயதிலேயே இலக்கணத்தைக் கற்பித்தனர். மனப்பாடம் செய்யும் பழக்கம் எல்லா நிலைகளிலும் வற்புறுத்தப்பெற்றது. பாடத் திட்டம் முக்கிய இடம் பெற்றதேயன்றி, படிக்கும் மாணுக்கர் மனநிலையினை ஒருவரும் சிந்தித்தார்களில்லை. ஆசிரியர்கள் உளவியலறிவு பெருததால் கற்போர் மனநிலைக்கு அப்பாற்பட்ட செய்திகளே அவர்கள் உள்ளத்தில் புகுத்தினர். வாய்மொழிப் பயிற்சி, வின விடை முறை, கற்பிக்கும் துணைக்கருவிகள், ! விளையாட்டுக்கள், விளையாட்டு முறை ஆகிய கூறுகளே அக்காலக் கற்பித்தலில் இல்லை. மானுக்கர் அடைந்த தண்டனைக்குச் செல்வரிக்கு இருந்தது.

பழைய முறைகளின் குறைகள் : முதலில் பேச்சு, பின்னர் படிப்பு, பின்னர் எழுத்து என்று கற்பித்தலே முறையாகும் , இயற்கையை யொட்டியதுமாகும். எழுத்தை முதலில் தொடங்குவது முறையன்று. எழுத்து முறையைப் படிப்பில் கையாளுதல் உளவியல் முறைக்குப் பொருந்துவதன்று. வீட்டில் குழந்தைகள் இயல்பாக முழுச் சொற்களையும் தொடர்களையுமே பேசுகின்றனராதலின், அதை யொட்டியே பள்ளியிலும் கற்பித்தல் முறையாகும். எழுத்திலிருந்து படிப்பு தொடங்குவது முழுதிலிருந்து பகுதிக்குப் போதல், தெரிந்ததிலிருந்து தெரியாததற்குப் போதல் என்ற இயற்கைவிதிகளுக்கு முற்றிலும் மாருக உள்ளது. வாய்மொழிப் பயிற்சி இன்மை செந்தமிழும் நாப்பழக்கம்’ என்ற பழமொழியை பொருளற்றதாகச் செய்கின்றது. பயிற்றும் ஆசிரியர்கள் குழந்தைகளின் மனநிலை, அறிவு வளர்ச்சி, மனவெழுச்சிகள், இயல்பூக்கங்கள் முதலிய வற்றை அறியாதது பெருங் குறையாகும். தண்டனே வெறுக்கத்தக்க ஒரு கூருகும். மனப்பாடம் செய்தல்