பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 தமிழ் பயிற்றும் முறை

நினைவு ஆற்றலை வளர்ப்பதாயினும் மனத்தின் பிற செயல்களாகிய உற்று நோக்கல், சிந்தனே, கற்பனே, கருதுதல், தீர்மானம் முதலியவைகள் சரியான இடம் பெறவில்லை. சிறந்த பகுதிகளே மட்டிலும் நெட்டுருச் செய்தால் போதும் என்ற எண்ணமே அவர்களிடம் இல்லை. ஐம்புலன் களையும் கவரவல்ல காட்சிப் பொருள் துணைக்கருவிகளாக அமையாதது ஒரு பெருங்குறை என்றுதான் சொல்லவேண்டும். விளையாட்டுமுறை இல்லாததும் ஒரு குறையே. இலக்கணப் பாடம் மொழி, கட்டுரைப் பாடங் களுடன் பொருத்திக் கற்பிக்கப்பெருததும், அதை விதி விளக்கு முறையிற் கற்பிக்கப்பெற்றதும், மிகச் சிறு வயதிலே இலக்கணப் பாடத்தை மேற்கொண்டதும் குறைகளாகவே கொள்ளப்பெறுதல் வேண்டும்.

நிறைகள் : நெட்டுருச் செய்ததால் பண்டையோர் மொழித்திறமை பெற்று விளங்கினர். நெட்டுருச் செய்த பகுதிகளின் சொல்லும் பொருளும் எப்போதும் உள்ளத்திலும் காதிலும் ஒலித்துக்கொண்டிருப்பதால், வேண்டுங்கால் அவற்றை நினைவு கூரலாம். அக்காலத்தில் மாணுக்கர் பெற்ற ஆழ்ந்த இலக்கண அறிவு தாமாகவே பல இலக்கியங்களே நயமுணர்ந்து கற்கத் துணையாக இருந்தது. ஆசிரியரும் மானுக்கரும் உட னுறைந்து பயின்றது சிறந்த கூறு என்று எவரும் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். பல துறைகளிலும் முன்னேற்றம் அடைந்துள்ள இக்காலத்திலும் இம்முறை இன்னும் சரியாக மேற்கொள்ளப்பெறவில்லை.

புதிய முறைகள் : சில அறிஞர்களின் சேவை

ரூலோ மேல் நாட்டில் மறுமலர்ச்சி’ (Renaissance) காலத்திலிருந்து புதிய கல்விமுறை தொடங்கியது என்று கருதலாம். ஃபிரெஞ்சு புரட்சியுடன் பழைய முறைகள் மறைந்தன. ஃபிரெஞ்சுப் நாட்டு அறிஞரான ரூலோவின் (கி.பி. 1712-1778) எமிலி'என்ற நூல்தான்