பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயிற்று முறைகள் {1} &競。

புதிய முறைகளின் வித்து எனலாம். ரூஸோவின் கல்வி பற்றிய கருத்துக்கள் தெளிவாக அதில் காணப்படு கின்றன. அவர் கருத்துப்படி கல்வி என்பது மனிதனல் வளர்க்கப்பெற்ற செயற்கைமுறை நாகரிகத்திற்கு ஒரு குழந்தையை ஆயத்தம் செய்வது அல்ல ; ஆணுல், குழந் தையின் இயல்பு மனிதகுல் படைக்கப்பெற்ற சமூகத்திளுல் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்படவேண்டும் என்பது அவர் விருப்பம். .'இயற்கை அன்னேயிடமிருந்து வரும் எவையும் சிறந்து விளங்குகின்றன ; ஆணுல், அவையனைத் தும் மனிதன் கைப்பட்டதும் சீரழிகின்றன ’’’ என்பது அவர் கொள்கை. இயற்கை அன்னை ஈன்ற குழந்தையை மனிதன் படைத்த சமூகத்தில் பழக்கிக்கெடுக்கக் கூடாது என்பதும், கல்வி புகட்டுதலில் குழந்தைதான் முக்கியக் கூறு, மனிதன் வளர்த்த பண்பாடல்ல என்பதும் அவர் கருத்து. இதனுல்தான் ரூஸோவைக் கல்வி முறையின் * காபர்னிகஸ்’ என்று கூறுகின்றனர். பூமியை நடுவாக வைத்துதான் ஏனைய கோள்கள் இயங்குகின்றன என்ற பழைய கொள்கையை காபர்னிகஸ் மறுத்து கதிரவனை நடுவாகக் கொண்டு ஏனேய கோள்கள் இயங்குகின்றன என்ற உண்மையை உலகிற்கு உணர்த்தியது போலவே, அதுகாறும் கல்வித்திட்டத்தினை நடுவாக வைத்துக் கற்பிக் கப்பெற்ற முறையைத் தவறு எனக் கண்டித்து, குழந்தையை நடுவாக வைத்துக் கற்பிக்கப் பெறவேண்டும் என்று கூறினர் ரூஸோ. ' குழந்தையை தன்ருக ஆராய்க : குழந்தையை அறிவது எளிதல்ல”, “குழந்தையைக் கவனி; இயற்கையோடு இசைந்து நட” என்பவை ரூஸோ கல்வித் துறையில் பணியாற்றுபவர்களுக்குக் காட்டிய உண்மைகள். அவர் கொள்கை உளவியல் உண்மைகளே ஒட்டியும் உள் ளது. அன்றியும், அவர் புலன்கள் வாயிலாகத்தான் கற்பிக்கவேண்டும் என்று அழுத்தமாகக் கூறிஞர். புத்தக

    • All things are good as they come out the hands of their Creator, but everything degenerates in the hands of man—Emile or A Treatise of Education by Rousseau.