பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயிற்று முறைகள் (1) S7

கூறினர். பெஸ்டலாஸ்ஸியினுடைய கொள்கையின் முதற் கூற்றை ஹெர்பார்ட் என்ற செருமானிய நாட்டுப் பேராசிரியர் அப்படியே தழுவினுர் ; இரண்டாம் கூறு அப்படியே ஃபிராபெல் என்ற செருமானிய நாட்டுக் கல்வி அறிஞரால் தழுவப்பட்டது. பெஸ்டலாஸ்ஸி ஓர் உளவியற் கலைஞர் அல்லர் ; ஆயினும், அவர் கல்வியை உளவியலின் அடிப் படையில் அமைக்க ஆவர்வங்கொண்டார். அதை ஹெர் பார்ட் என்ற அறிஞர் பின்னுல் நிறைவேற்றினர்.

ஹெர்பார்ட் : ஜொகான் பிரைடெரிச் ஹெர்பார்ட் (கி.பி. 1776-1841)என்ற செருமானியப் பேராசிரியர் மனத்தைப் பற்றி நன்கு ஆராய்ந்தார் ; மனம் செயற்படுவதைப் பற்றிய பல உண்மைகளைக் கண்டார். மனம் எவ்வாறு வெளியுலக அனுபவத்தை வாங்கிக்கொண்டு தன் வயமாக்கிக் கொள்ளுகின்றது என்பதை ஒரு கொள்கையாக விளக்கம் தந்து, கற்பித்தலின் ஐந்து படிகளை உலகிற்கு உணர்த்தினர். இந்த ஐந்து படிகளின் வழியாகத்தான் மனம் வெளியுலக அனுபவத்தைப் பெறுகின்றது என்பது ஹெர்பார்ட் நமக்குக் காட்டிய உண்மை. மனத்தைத் தயாரித்தல், எடுத்துக்கூறல், ஒப்பிடல்,

பொதுவிதிகாணல், விதியைச் .ெ ச ய ப டு த் த ல் ஆகியவை அவர் கண்ட ஐந்து படிகளாகும்."

வழிவழியாக இப் படிகளே அறிந்தோ அறியாமலோ பல அறிஞர்கள் கற்பித்தலில் கையாண்டபோதிலும் அவற்றை வரையறை செய்து உலகிற்கு முதன்முதலாக உணர்த்திய பெருமை ஹெர்பார்ட்டையே சாரும். மனத்தைத் தயாரித்தல் என்பது, கற்றுக்கொள்ளும் குழந்தைகளின் மனத்தைப் புதிதாகக் கற்கப்போகும் பொருளே வாங்கிக் கொள்வதற்குத் தயாரித்தல் ஆகும். எ டு த் து க் கூறல் என்பது, புதிதாகக் கற்பிக்கும் பொருள்களைப் பக்குவப்படுத்தி குழந்தைகட்குக் கற்பித்தல் ஆகும். ஒப்பிடல் என்பது, பழைய அனுபவங்களேயும் புதிதாக அடைந்த அனுபவங்களேயும் இயைபுபடுத்திப்

§ 64-ஆம் பக்கம் பார்க்க.