பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயிற்று முறைகள்.(1) 89

பல்வேறு இடங்களில் அம்மையார் கொள்கையைத் தழுவி பல குழந்தைக் கல்வி நிலையங்கள் தோன்றி நடைபெற்று வருவதைக் காண்கின்ருேம்.

நம் நாட்டில் காந்தியடிகளின் கருத்தில் தோன்றிய வார்தா கல்வி முறையும் உளவியற்கொள்கைகளின் அடிப் படையில் நமது நாட்டின் தேவைகளுக்கேற்றவாறு உரு வாக்கப்பெற்துள்ளது. அக் கல்வி முறையில் ஏதாவது ஒரு கைத்தொழிலை நடுவாக அமைத்துக்கொண்டு தாய்மொழி, கணக்கு, சமூக பாடம், பொது அறிவியல் முதலிய பாடங்கள் கற்பிக்கப்பெறுகின்றன.

ஜான் ட்யூயி : அமெரிக்க நாட்டைச் சார்ந்த ஜான் ட்யூயி என்பார் (கி.பி. 1859-1952)கல்வித் துறையில் ஒரு புதிய காலத்தைத் தொடங்கியுள்ளார். பிற்கால வாழ்க் கையைக் குழந்தை பள்ளியிலேயே ஒரளவு கண்டுகொள்ள வேண்டும் என்பது அவர் கொள்கை. இயக்கம் குழந்தைப் பருவத்தின் இயல்பாதல்ால், குழந்தை செயலுக்குத் துடித்து நிற்கின்றது. குழந்தை பள்ளியில் பெறும் பட்டறிவு அதனிடம் இயல்பாக அமைந்த இயக்கப் பண்புகளையும் கவர்ச்சிகளையும் ஒட்டி இருத்தல் வேண்டும். பள்ளி வாழ்க்கை இம்முறையில் அமைந்தால், குழந்தையின் கல்வி சிறக்கும். இதைத் தெளிவாக உணர்ந்த ட்யூயி கற்றல் செயல்முறையில் அமையவேண்டும் என்ற கொள்கையைக் கண்டு அதை நாடெங்கும் பரப்பினுர்; ஒர்வித அனுபவமு மின்றிச் செய்திகளைக் குழந்தை கற்பதை அவர் அடியோடு வெறுத்தார்.

ஜான் ட்யூயி குழந்தையின் இயற்கைக் கவர்ச்சிகளை நான்கு விதமாகப் பகுத்துக் கூறுகின்ருர். உரையாடுவதன் மூலம் கருத்துக்களைத் தெரிவிப்பதில் ஆர்வம், விளுக்கள் மூலம் செய்திகளே அறிவதில் ஊக்கம், பொருள்களைப் புனைவதில் விருப்பம், கருத்துக்களைக் கலையுணர்வுடன் கூறுவதில் ஆசை ஆகிய நான்கு பண்புகளும் குழந்தை களிடம் இயல்பாக அமைந்தவை என்றும், அவைதாம் குழந்தையின் விரைவான வளர்ச்சிக்கு இயற்கையாக