பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

凝}& தமிழ் பயிற்றும் முறை

லுள்ளிருக்கும் இளஞ்செடியின் இயல்புக்கேற்றவாறு இலேகளை விட்டுக் கிளேத்து மரம் வளர்கின்றது. அதுபோனவே, ஒரு குழந்தை தன்னிடம் இயல்பாக, அமைந்த இயல் பூக்கங்களே யொட்டி வளர்ந்து முழு மனிதன் ஆகின்றது : அவற்றிற்கேற்றவாறு அதன் ஆளுமை (Personality) வளர்ச்சி பெற்று விரிவடைகின்றது. இந்த உண்மையை அறிந்துதான் ஃபிராபெல் பள்ளியைக் கிண்டர்கார்ட்டன்’ என்று வழங்கினர். தன்னுடைய கல்வி முறைக்கும் * கிண்டர்கார்ட்டன் முறை என்று பெயரிட்டார். கிண்டர் கார்ட்டன் முறைப்படி ஆசிரியர் குழந்தைகளிடம் இயல்பாக அமைந்து உள்ளுறைந்து கிடக்கும் இயல்பூக்கங்கள் வளர்ச்சி பெற்று அவர்கள் முழு மனிதர்களாவதற்குத் துணைசெய்ய வேண்டும். குழந்தைகளிடம் இயல்பாக அமைந்துள்ள இப் பண்புகளே அவர் அறிந்திருக்க வேண்டும். தன்னியக்கம் என்பது, மனத்தின் முக்கியமான பண்பாகும்; அது குழந்தையின் விசேயாட்டுமூலம் வெளிப்படுகின்றது. எனவே, குழந்தை விளையாட்டுமூலத் தான் முழுவளர்ச்சி யடையவேண்டும். ஃபிராபெல் பிற்கால மனிதனுக்குத் தேவையான வேலே தான் குழந்தைப் பருவத்தில் விளையாட்டு வடிவாக வெளிப்படுகின்றது என்று கூறுகின்றர். எனவே, குழந்தைகட்கு விளையாட்டு முறையில்தான் கற்பிக்கவேண்டும் என்று ஃபிராபெல் கருதுகின்ருர். குழந்தைகள் விளையாடுவதற்கு ஆசிரியர் உற்சாகம் ஊட்டவேண்டும் ; விளையாட்டில் கானும் நல்ல கூறுகளில் அவர் கவனம் செலுத்தவேண்டும்; தேவை யற்ற அல்லது முறையற்ற கூறுகளைத் தவிர்த்தல் வேண்டும்.

குழந்தைகளின் தோட்டத்தில் உரிமை, விளையாட்டு, மகிழ்ச்சி ஆகிய மூன்றும் இடம் பெறுதல்வேண்டும்; இவ் வாறு இடம் பெற்ருல்தான் குழந்தைகளின் உணர்வுகள் நன்முறையில் வெளிப்படும். அங்குப் புத்தகங்களுக்கு வேலே இல்லை; குழந்தைகளுக்கும் குறிப்பிட்ட மனப்பயிற்சி இல்லை; குழந்தைகளின் உணர்வுகள் மூன்றுவிதமாக

颅 ٭-م *

வெளிப்படுவதற்குப் பயிற்சிகள் அளிக் கப்பெறுகின்றன.