பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயிற்று முறைகள்-(1) 93.

அவை பாட்டு, இயக்கம், செய்கை; இம்மூன்றும் ஒன்ருகச் சேர்ந்தே பயின்றுவரும். எடுத்துக்காட்டாக ஒரு கதையைக் கற்பிக்க வேண்டுமானுல் அது பாட்டாகக் கற்பிக்கப்படும்; கற்கும்போது ஆட்டமும் அபிநயமும் இருக்கும் கற்ற வுடன் அதை ஒவிய வடிவில் தீட்டப் பயிற்சி தரப்பெறும். எனவே, குழைந்தையின் கற்பனையும் எண்ணமும் பருப் பொருட்டாகத் தூண்டப்பெற்று உற்சாகத்தைப் பெறு: கின்றன. குழந்தையின் புலன்கள் நல்ல பயிற்சியினைப் பெறுகின்றன. தக்க் பாட்டுக்களைத் தேர்ந்தெடுத்து, ஏற்ற விளையாட்டுக்களே ஆராய்ந்து, வேண்டிய ஓவியங்களைக் காண்டதே ஆசிரியரின் வேலையாக இருக்கும். குழந்தைகள் அம் மூன்றின் மூலம் நல்ல மொழிப் பயிற்சியினை அடைகின்றனர். . . - - -

குழந்தைகளின் முழுக் கல்விக்கும் பயிற்சிக்கும் என்றே ஃபிராடெல் இருபது விதமான துனேக்கருவிகளே உண்டாக் கினர். அவை குழந்தைகளின் வளர்ச்சி நிலக்கேற்ற வாறு அளவிடப் பெற்றிருக்கின்றன. அந்தத் துணைக்கருவிகள் ஃபிராபெலில் கொடைகள்” (Roebel's gifts). என்று வழங்கப்பெறுகின்றன. அவற்றில் ஏழு துணைக் கருவிகள்தாம் இன்று அப்பெயரால் வழங்கப்பெற்று நடை முறையிலிருந்து வருகின்றன. அவற்றைக்கொண்டு குழந்: தைகள் உடல், உள்ள, ஒழுக்கப் பயிற்சிகளைப் பெறலாம். குழந்தைகளின் வளர்ச்சிக் கேற்றவாறு அக்கொடைகள் எவ்வாது கையாளப்பெறவேண்டும் என்பதை ஆசிரியர் அறுதியிடுவார். கொடைகளின் விவரங்களே முறை நூல் களில் விரிவாகக் காணலாம். முன்-குமரப் பருவத்தின் கல்வி யிலும் ஃபிராபெல் கருத்தைச் செலுத்தியுள்ளார். அப் பருவத்தில் விளையாட்டு முக்கியக் கூறு அன்று ; வேலை தான் அப் பருவத்தின் முக்கியக் கூறு. அப் பருவத்தில் மாளுக்கன் தொழிலாற்றுவதில் ஆர்வத்தையும் தொழிலின் பயனில் கருத்தையும் செலுத்துகின்ருன். எனவே, பாடத் திட்டம் அதற்கேற்றவாறு அமைக்கப் பெற்றுள்ளது. அங்குக் கைத்தொழிலுக்கும் உடல் உழைப்புக்கும் முக்கியத்.