பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:94 தமிழ் பயிற்றும் முறை

துவம் அளிக்கப்பெற்றுள்ளது. தோட்ட வேலே, மர வேலை, தச்சுவேலே ஆகியவை பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளன. சமயப் பாடம், இயற்கைங் பாடம், கணக்கு, ஒவியம், மொழி ஆகியவை பிற பாடங்களாக அமைந்துள்ளன: ஃபிராபெல் இயற்கைப் பாடத்திற்குத் தனிச் சிறப்பு அளித்துள்ளார் ; இயற்கையைப் படிப்ப தால் ஒழுக்கநிலை, சமய நிலை, ஆன்மநிலை ஆகியவை வளர்ச்சியுறும் என்று அவர் நம்புகின்றர்.

நவீன கல்வி நடைமுறைகளில் ஃபிராபெல் முறையின் செல்வாக்கு : குழந்தைப் பருவத்தின் கல்வியில் அதிகக் கவனம் செலுத்தவேண்டும் என்பதை முதன் முதலாகக் கூறியவர் அவரே. குழ்ந்தையின் தனிவீறு (individuality) பள்ளிச் சமூகச் சூழ்நிலையில் வளரும் என்பதைக் கூறிய வரும் அவர்தான். அவருடைய கிண்டர்கார்ட்டன் ஒரு சிறு உலகம் ; அங்கு எல்லாக் குழந்தைகளும் பொறுப்பை

ஏற்கின்றனர்; தனிப்பட்டவரின் உரிமைகள் நன்கு மதிக்கப் பெறுகின்றன; சகோதரத்துவம் வளர்ச்சி .யடைகின்றது ; வற்புறுத்தாமலேயே கூட்டுணர்ச்சியை

எல்லோரும் மேற்கொள்ளுகின்றனர்” என்று ஹயூஸ் என்ற அறிஞர் கூறுகின்ருர். குழந்தைகளிடம் காணப்பெறும் இயல்பூக்கங்கள்தாம் குழந்தையின் நடத்தையை (Behaviour) உருவாக்குகின்றன என்றும், குழந்தையின் இயல்பை யொட்டிக் கற்பித்தலே முறையாக அமைய வேண்டும் என்றும், விளையாட்டு முறைதான் அவ்வாறு கற்பித்தற்கு ஏற்றது என்றும் ஃபிராபெல் கூறினர். புலன் களுக்குப் பயிற்சி யளிக்கவேண்டும் என்று கூறியவரும் அவரே. செயல் முறைக் கல்விக்கு வழிகாட்டியவரும் கல்வி பன்முகப் பயிற்சிமூலம் அளிக்கப்பட வேண்டும் என்று கூறியவரும் அவர்தான்.

இம் முறையின் சில குறைகள் : இம் முறையில் சில குறைகளும் இருப்பதாகக் காட்டப்பெறுகின்றன. ஃபிராபெல் கூறும் கல்வியின் தத்துவத்தை எல்லோரும் உணர்ந்து