பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயிற்று முறைகள்-(1) - - 37

தான் வேலையில் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளிக்க முடியும் என்பதையும் கண்டார். விளேயாட்டினுல் உடலுக்கும் உள்ளத்திற்கும் நல்ல விருந்தளிக்க முடியும் என்பதையும் அறிந்தார். எனவே, விளையாட்டு முறைசயின் தந்தையுமானுர். - - - -

விளையாட்டைப்பற்றிய சில கொள்கைகள்: விளயாட்டின் மூலகாரணத்தைப்பற்றி உளவியற் கலைஞர்களிடையே பல்வேறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. ஷில்லர் என்ற செருமானியக் கவிஞரும் அவரைப் பின்பற்றி ஹெர்பர்ட் ஸ்பென்ஸ்ர் என்ற பொறி இயல்-தத்துவ அறிஞரும் குழந்தைகளிடம் தற்காப்புக்கும் வளர்ச்சிக்கும் தேவையானதைவிட அதிகமான ஆற்றல் இருக்கின்றதென்றும், தேவைக்குரிய ஆற்றல் போக எஞ்சிய ஆற்றலே விளையாட்டின் மூலம் வெளிப்படுகின்றது என்றும் கருதினர். வயிறு நிறைய உண்ட சிங்கங்கள் கர்ச்சனே செய்கின்றன ; உண்டு வயிறு நிறைந்த பறவைகள் பாடுகின்றன. அவ்வாறே குழந்தைகளும் தம்மிடமுள்ள அளவு மீறிய ஆற்றலால் களித்து விளையாடுகின்றனர். நீராவிப் பொறியும் தேவைக்கு அதிகமாக வுள்ள நீராவியை வெளி விடத்தானே செய்கின்றது ! இவ்வாறு அக் கொள்கைக்குச் சமாதானம் கூறப்படு கின்றது. கிழவர்கள், நோயாளிகள், பெண்கள் ஆகியோரும் விளையாட்டை விரும்புவதற்கும், குழந்தைகளும் பல்வேறு நிலைகளில் பல்வேறு விதமான அளவு உற்சாகம் காட்டுவதற்கும் அக் கொள்கையால் விளக்கம் கூற இயலவில்லை. ஆனல், ஆற்றல் உடலிலிருந்து மட்டிலும் தோன்றுவதன்று, உள்ளத்திலிருந்தும் தோன்றுகின்றது என்று கொண்டால் - ஒரளவு அக்கொள்கை விளக்கமடையும். பகல் முழுவதும் தொழிலில் ஈடுபட்டு உழைத்த வணிகர் வீட்டிற்கு வந்ததும் பாய் விரிப்பதற்குக் கூட ஆற்றலின்றிக் களைத்திருக்கின்ருர், ஆளுல், அவரிடம் டென்னிஸ் விளையாடுவதற்கும் சீட்டு விளையாடுவதற்கும் ஆற்றல் இருக்கின்றது. அந்த ஆற்றல் எங்கிருந்து வந்தது? அஃது இயல்பூக்கங்களிலிருந்து பிறந்தது ; அது போரிடும் இயல்பூக்கத்திலிருந்து

த-8