பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 தமிழ் பயிற்றும் முறை

(Combative instinct) பிறந்ததாகக் கொள்ளலாம். பாய் விரிப்பதன் அடிப்படையில் இயல்பூக்கம் ஒன்றுமில்லை. பிற மூலங்களிலிருந்து வெளிப்படும் ஆற்றல்கள் t குறையுங் காலத்தில் இயல்பூக்கங்களிலிருந்து தோன்றும் ஆற்றல்கள் செயற்படுகின்றன. அதுபற்றிய விரிவான கருத்துக்களை உளவியல் நூல்களில் கண்டு கொள்க.

விளையாட்டு என்பது வாழ்க்கையின் ஆயத்தம் என்று பொருள்கொண்டு மற்ருெரு கொள்கை த்ோன்றியுள்ளது. மேலி பிரான்சி என்பார் அதை முதலில் தொடங்கினர்; கார்ல் குரூஸ் என்பார் அதை நன்கு ஆதரித்து விளக்கம் தந்தார். படிமுறை வளர்ச்சி (Evolution) ஏணியில் உயர்ந்த படியிலுள்ள பிராணிகளிடந்தான் விளையாட்டு தெளிவாகக் காணப்படுகின்றது என்று அவர் கூறுகின் ருர். பூனேயும் நாயும் பிறந்தவுடனே வாழ்க்கைக்குப் பக்குவமடைவதில்லை. பக்குவம் அடையும் காலம் எய்தும்வரை பாதுகாப்பிற்கும் உணவிற்கும் அவை பெற்ருேரையே நாடுகின்றன. அக்காலத்தை அவை விளையாட்டில் கழிக்கின்றன. கீழ்ப் படிகளில் உள்ள எறும்பும் தேனியும் சூழ்நிலையை விரைவில் அனுசரித்துக் கொள்ளுகின்றன ; அவை விளையாட்டில் வீண் காலம் போக்குவதில்லை. உயர்நிலையிலுள்ள பிராணிகள் தம் வளர்ந்த பருவத்தில் குறுக்கிடும் தீவிரமான செய்கைகளே யெல்லாம் அவை தம் குழந்தைப் பருவத்திலேயே எதிர் பார்த்து நிற்கின்றன என்று குரூஸ் கருதுகின்ருர். எடுத்துக் காட்டாக,பூனேக்குட்டி அசையும் பொருள்களைத் தொடர்ந்து விரட்டுகின்றது; அது தன் பிற்கால வாழ்வில் எலியைப் பிடிக்கும் பயிற்சியை அடைகின்றது. அவ்வாறே நாய்க்குட்டியும் சண்டை விளையாட்டில் ஈடுபடுகின்றது ; அது தன் பிற்கால வாழ்விற்குப் பயன்படும் முறையில் பயிற்சியிஜனப் பெறுகின்றது. எனவே, விளையாட்டு உயிர்ப்பிராணிகளின் தேவையை யொட்டிய உடன் பிறந்த பண்பு என்பது குரூஸின் கோட்பாடு. தீவிரமாகப் பயன்படுவதற்கு முன்னர் பிராணிகளின் இயல்பூக்கங்கள் எதிர்காலத்தில் வேண்டிய திறனே யொட்டிப் பயிற்சியடை