பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயிற்று முறைகள்-(1) 99.

கின்றன என்று அவர் கருதுகின்ருர். அக்கொள்கையும் எல்லாவித , விளையாட்டுகட்கும் விளக்கம் தரவில்லை. வேண்டுமானுல், சிறுவன் ஒருவனுல் போர் வீரனுக விளையாடப்படும் விளையாட்டையும் சிறுமி ஒருத்தியால் விளையாடப்படும் பொம்மைப் பராமரிப்பு விளையாட்டையும் வாழ்க்கையின் ஆயத்த விளையாட்டுக்களாகக் கருதலாம் ; ஆளுல், எல்லாவற்றையும் இவ்வாறு கருதுவதற்கில்லை : கருதவும் இயலாது. ஆயினும், குரூஸ் இன்னதெற்கென்று அறிந்து கொள்ள்ாமலேயே குழந்தைகள் பிற்காலத்திற்குரிய சிக்கலான வாழ்க்கைக்குத் தம்மை ஆயத்தம் செய்து கொள்கின்றனர் என்று வாதிடுகின்றர்.

ஸ்டான்லி ஹால் என்ற அமெரிக்க உளவியற்கலைஞர் குழந்தைகள் விளையாடுவதை வாழ்க்கை-ஆயத்தம் என்று கருதுவதைவிட, மனித இனம் பல்லூழிகாலத்தில் அடைந்த அனுபவங்களைக் குழந்தைப் பருவத்தில் திரும்பவும் அடைகின்றது என்று கருதுவது பொருத்தம் என்று கூறுகின்ருர். பூனைக்குட்டியின் விளையாட்டிற்கும் நாய்க்குட்டியின் விளேயாட்டிற்கும் அக்கொள்கையால் நல்ல விளக்கம் தரலாம். துரத்தி விளையாடுதல், வேட்டையாடல், மீன்பிடித்தல், கல்லெறிதல், வீடுகட்டுதல், குகைகளில் ஆர்வங்காட்டல் ஆகிய அனைத்தும் வழிவழியாக வரும் குடிவழிப் பழக்கத்தை நன்கு நினைவூட்டும் செயல்கள் என்பது ஹாலின் கருத்து.

ஹாலின் கொள்கையை யொட்டியே ஜேம்ஸ் ராஸ் என் பார் காலுதற் கொள்கை (Cathartic theory) என்ற கொள் கையைக் குறிப்பிடுகின் ருர். Catharsis என்ற சொல்ல முதன் முதல் கையாண்டவர் அரிஸ்டாட்டில் என்ற அறிஞர். துன் பியல் நாடகத்தைத் திறனுய்ந்தபொழுது அச்சொல் கையாளப்பட்டுள்ளது. பேதி மருந்து உடலிலிருந்து வேண் டாத பொருள்களே அகற்றுவது போலவே, ஆன்மாவைச் சூழ்ந்துள்ள அழுக்குப் பொருள்களைத் துன்பியல் நாடகங்கள் அகற்றுகின்றன என்பது அவர் கொண்ட கொள்கை. ஒரு துன்பியல் நாடகத்தைக் காணும்பொழுது நம்மிடம் தேங்கிக்