பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 தமிழ் பயிற்றும் முறை

கிடக்கும் (pent-up) ஒரு சில உணர்வுகள் செயற்பட்டு வெளிப்படுகின்றன. நாமும் கதைத் தலைவனுடைய உணர்வுகளைப் பெறுகின்ருேம் ; அவன் படும் துன்பங்களே யெல்லாம் நாமும் ஒரளவு அனுபவிக்கின்ருேம். அவனிடம் நிலைபெறும் உணர்வுப்போராட்டம் நம்மிடமும் தோன்றுகின்றது. ஜேம்ஸ் ராஸ் என்பாரின் கருத்துப்படிவிளையாட்டும் இம்மாதிரிச் செயலைப் புரிகின்றது. குழந்தைப் பருவத்திலும்

சரி, குமரப்பருவத்திலும் சரி, விளையாட்டு நம்மிடையே’ அடங்கிக் கிடக்கும் (pent-up) இயல்பூக்கங்களும் உணர்வு: களும் வெளிபடத் துணைசெய்கின்றது. நாகரிகவாழ்க்கை u%5ü Gurfióth soujśkbáàsh (Instinct of pugnacity). செயற்படுவதற்கு அதிக வாய்ப்பில்லை. நாகரிக உலகில் விளையாட்டில் அவ்வாய்ப்பு கிடைக்கின்றது. ஒவ் வொரு விளையாட்டும் போலிச் சண்டையே ; அதில் குருதி' சிந்துவதில்லை ; சினமும் வெளிப்படுவதில்லை. ஆளுல், அந்த இயல்பூக்கத்திலிருந்து ஆற்றலே வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பினே நல்குகின்றது. பாவனே உலகில் குழந்தை கள் விளையாடும் விளையாட்டிலும் அவ்வாற்றல்கள் வெளிப்படுவதற்கு நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கின்றன.

கொள்கைகளின் ஒருமைப்பாடு : இக் கொள்கைகளே யெல்லாம் ஆராய்ந்தால் அவையாவும் முரண்பட்டவை அல்ல என்பதும், அவையாவும் ஒன்றையொன்று விளக்கி நிற்கின்றன என்பதும் புலணுகும். குரூஸின் வாழ்க்கைஆயத்தக் கொள்கை ஜேம்ஸ் ராஸ் குறிப்பிடும் காலுதற் கொள்கையால் விளக்கமடைகின்றது. அன்றியும், அக் கொள்கை ஹாலின் குடிவழிக் கொள்கையின் நீட்டம் என்றும் கருதலாம். வழிவழியாக நம்மிடையே வந்துகொண்டிருக்கும் மனப்பான்மைக்குக் காரணமாகவுள்ள இயல்பூக்கங்களினின்றும் பிரிக்கமுடியாத ஒரு சில உணர்வுகள் விளையாட்டில் வெளிப்படுகின்றன. இவ்வாறு அவை வெளிப்படாவிட்டால் அவை சிதைக்கப்பட்டு வேறு வடிவத்தில் கேடு விளைவிக்கும். எனவே, காலுதற் கொள்கை குரூஸ் அவர்களின் முன்னுேக்கத்தையும் (forward look) ஹால்