பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 O2 தமிழ் பயிற்றும் முறை

உலக வரலாற்றைப் பார்த்தால் மனிதனுடைய அருஞ் செயல்கள் (Achievements) யாவும் விளையாட்டின் அடிப் படையில் தோன்றியவை என்பது தெரியவரும். ஆங்கில மொழியில் விளையாட்டு எனப் பொருள்படும் Play என்ற சொல் உயர்ந்த நாடகத்தைக் குறிக்கின்றது. உலகப் புகழ் பெற்ற செகப்பிரியரின் நாடகங்கள் யாவும் சாவா இலக்கி யங்கள். இலக்கியம், ஒவியம், சிற்பம், இசை, அறிவியல் ஆகிய துறைகளில் மனிதன் ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் செயல்களே மேற்கொண்டு கைபுனைந்தியற்றிய Łół. உயர்ந்த பொருள்களைப் படைத்துள்ள நிகழ்ச்சிகள் காணக் கிடக்கின்றன. எனவே, விளையாட்டு முறையைக் கற்றலில் மேற்கொண்டால், நல்ல பயனே எதிர்பார்க்கலாம் என்பது புலனுகின்றது. புதிய கல்விமுறைகள் யாவும் விளேயாட்டின் அடிப்படையில்தான் தோன்றியுள்ளன. பல ஆண்டுகளாகக் கல்வி அறிஞர்கள் கருத்தில் தெளிந்து வெளிப்பட்டவை அவை. அந்த அறிஞர்கள் பல்லாண்டுகளாகக் கல்வித் துறையில் உழைத்துப் பெற்ற பட்டறிவின் விளைவுகள் அவை. எனவே, புதுமைக் கவிஞர் பாரதியாரும்,

' ஓடி விளையாடு பாப்பா,-நீ

ஒய்ந்திருக்க லாகாது பாப்பா, கூடிவிளை யாடு பாப்பா-ஒரு குழந்தையை வையாதே பாப்பா. காலை யெழுந்தவுடன் படிப்பு,-பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு ; மாலை முழுதும் விளையாட்டு-என்று வழக்கப் படுத்திக் கொள்ளு பாப்பா.” என்று பாப்பாவைப் பார்த்துப் பாடி அதை விளை யாட்டில் விடுகின்ருர், செயல் திட்ட முறை, டால்ட்டன் திட்டம், மாண்டிஸாரி முறை, கிண்டர்கார்ட்டன் முறை, நடிப்பு முறை போன்ற புதிய முறைகள் யாவும் விளே யாட்டை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றின் விரிவைப் பின்னர்க் காண்போம்.