பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- பயிற்று முறைகள்-(1) 103

விளையாட்டு முறையின் நிறைகள் : இம் முறையால் பல நன்மைகள் விளைகின்றன. கட்டாய மின்மையால் குழந்தை கள் ஆர்வத்தோடும் பற்ருேடும் கற்றலில் ஈடுபடுவர். கல்வியற்றிய மனப்பான்மை அவர்களிடம் மாறி அறிவு நன்கு வளரத் தொடங்கும். படிப்பில் பற்றும் கவர்ச்சியும் ஏற்பட்டு அதிகமாகக் கற்பர். படிப்பதில் வெறுப்பும் சலிப்பும் ஏற்படுவதில்லை. விளையாட்டு முறையால் குழந்தைகள் பல்வேறு பட்டறிவுகளை யடைகின்றனர். அவர்கள் பல்வேறு துறைகளில் செயலாற்றவும், பல்வேறு பொருள்களைக் காணவும், பல்வேறு மக்களிடம் பழகவும் வாய்ப்புக்கள் உண்டாகும். ஐம்பொறிகள் வாயிலாக அறிவு பெறும் வாய்ப்பினையும் அவர்கள் பெறலாம். விளேயாட்டு முறை ஒத்துணர்ச்சி, விதிகளுக்கடங்கல், தலைவருக்குக் கட்டுப்படல், புறங்கூருமை, பிறர் கருத்தை அறிதல், வெற்றி தோல்விகளே ஒன்றுபோல் பாவித்தல் போன்ற பண்புகளே வளர்க்கின்றது. இம்முறையால் மாணுக்கர் கவனத்தைப் படிப்பில் ஈர்க்கவும், ஆசிரியர் பேசும் அளவைக் குறைத்துக் கொள்ளவும் வாய்ப்புக்கள் உண்டாகின்றன. அன்றியும், இம்முறையால் ஒழுக்கமும் (Character) வளர்கின்றது என்று நம்புகின்றனர். மனிதன் தனியாக இயங்கும்பொழுது வேண்டிய் துணிவு, நுண்ணுணர்வு, விடாமுயற்சி, தன்னம்பிக்கை, தன்னடக்கம் போன்ற பண்புகளையும், சமூகத்துடன் சேர்ந்து இயங்கும் பொழுது வேண்டிய நட்பு, பிறர் கருத்துக்கு மதிப்புத் தருதல், பொறுமை போன்ற பண்புகளையும் வளர்த்துச் சிறந்த குடிமகனுகத் திகழத் துணைபுரிகின்றது. இம்முறை.

சில குறைகள் : இம் முறையில் சில குறைகளும் காட்டப்பெறுகின்றன. எல்லாப் பாடங்களையும் இம்முறை யில் கற்பித்தல் இயலாது; ஒரு பாடத்தின் எல்லாப் பகுதி களேயும் இம்முறையின் வாயிலாகக் கற்றலும் அரிதே. கீழ்வகுப்புக்களில் இம்முறையைக் கையாள முடிவதைப் போல் மேல் வகுப்புக்களில் கையாள முடிவதில்லை. மாணுக்கர்களின் கவனம் பாடங்களில் பதிவதற்குப்