பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயிற்று முறைகள்-{1} 1 05

அவை அடங்குமாறு காலியிடம் அமைத்திடுக. குழந்தை களிடம் தனித்தனியாகச் சிறு சிறு துண்டு அட்டைகளில் எழுதப்பெற்ற அந்தச் சொற்கள் அல்லது எழுத்துக்கள் இருக்கும். குழந்தைகள் தங்களிடமுள்ள சொற்கள் அல்லது எழுத்துக்களைப் பெரிய அட்டையிலுள்ள அச் சொற்கள் அல்லது எழுத்துக்களுக்குக் கீழ் அமைக்க வேண்டும்.

(4) இஃது என்ன? ஒரு வகுப்புக் குழந்தைகளே வட்ட மாக உட்காரவைத்திடுக. ஒரு குழந்தையை வட்டத்தின் நடுவில் உட்காரச் செய்க. ஒவ்வொரு குழந்தையும் தன் கற்பலகையில் ஏதேனும் ஒரு சொல்லை எழுதவேண்டும். எழுதி முடிந்தவுடன் எல்லோரும் தத்தம் கற்பலகைகளே வட்டத்தின் நடுவில் உட்கார்ந்து கொண்டிருக்கும் குழந்தை காணுமாறு துக்கிப் பிடிக்கவேண்டும், அக் குழந்தை எல்லாக் கற்பலகைகளிலும் எழுதியிருப்பவற்றை வரிசையாகப் படித்து வரவேண்டும். ஒரு சொல்லேப் படிக்க முடியாவிட்டாலும், படிக்கத் தவக்கம் ஏற்பட்டாலும் அச்சொல்லே எழுதிய குழந்தை வட்டத்தின் நடுவிற்குச் செல்லவேண்டும்; அதுகாறும் வட்டத்தின் நடுவிலிருந்த குழந்தை வட்டத்திற்குச் செல்லவேண்டும். சொல்லுக்குப் பதிலாக சொற்ருெடர்கள், எதிர்ச்சொற்கள், ஒருமை பன்மை சொற்கள், விளு-விடை ஆகியவற்றைப் பயன்படுத்தி இவ்விளையாட்டை நடத்தலாம். ஒரு குழந்தை எல்லாவற்றையும் படித்துவிட்டால், வேருெரு குழந்தையை வட்டத்திற்குள் அனுப்பி இவ்விளையாட்டைத் தொடர்ந்து நடத்தலாம். வகுப்பு பெரிதாக இருந்தால் அதை இரு பிரிவுகளாகப் பிரித்துக்கொண்டு இவ்விளையாட்டை தனித் தனியாக மேற்கொள்ளலாம்.

(5) கண்ணும்பூச்சி அல்லது ஒளிந்தாடல் : பல அட்டைகளில் வெவ்வேறு சொற்களே எழுதி வைத்துக் கொள்க. ஒரு குழந்தையை அறைக்கு வெளியே அனுப்பி விட்டு ஏனையோரைக் கண்களே மூடிக்கொள்ளச் செய்க.