பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 06 தமிழ் பயிற்றும் முறை

சொற்களுள்ள அட்டைகளை வகுப்பில் பல இடங்களில் பரப்பி வைத்திடுக. பிறகு வகுப்பிலுள்ளவர்கள் கண்களைத் திறந்துகொள்ளலாம். வெளியிலிருக்கும் குழந்தை கண்டு பிடிக்கவேண்டிய சொல்லே நிச்சயித்துக்கொண்டு அதை ஒரு குழந்தையின் மூலம் வெளியிலிருக்கும் குழந்தைக்குச் சொல்லி அனுப்புக. உடனே அக்குழந்தை வகுப்பிற்கு வந்து அச்சொல்லேக் கண்டுபிடிக்கும். சொல்லுக்குப் பதிலாகச் சொற்ருெடர்களையும், முற்றுப்பெருத சொற்ருெடர்களேயும் கையாளலாம். ஆசிரியர் தம் அறிவுக்கும் தகு வழிகாணும் திறமைக்கும் ஏற்றவாறெல்லாம் இவ்விளையாட்டை அமைத்துக்கொள்ளலாம்,

(8) ஆணையிடல்”. ஒரு வகுப்புக் குழந்தைகளே வட்ட மாக உட்கார வைத்திடுக. ஒரு குழந்தையிடம் ஏதாவது ஒரு கட்டளையை ஒசையின்றிக் கூறுக. அக்குழந்தை தன் அருகிலுள்ள மற்ருெரு குழந்தைக்கு அதை மெதுவாகத் தெரிவிக்கும். கடைசியிலுள்ள குழந்தை அக் கட்டளையை நிறைவேற்றும். இதையே இன்னுெருவிதமாகவும் மேற் கொள்ளலாம். ஒரு குழந்தையை வகுப்பறைக்கு வெளியில் அனுப்புக. மற்ருெரு குழந்தையின் மூலம் அக்குழந்தையிடம் தெரிவிக்குமாறு ஏதாவது ஒரு கட்டளையை எல்லோரும் அறியுமாறு கூறி அனுப்பவும். குழந்தைகளின் நிலைக்கு ஏற்றவாறு கட்டளைகளைக் கடினமாக்கலாம். குழந்தை அக்கட்டளையை எவ்வாறு ஒழுங்காகத் தெரிவிக்கின்றது என்பதை வெளியிலிருக்கும் குழந்தை அதைச் சரியாக நிறைவேற்றுவதிலிருந்து அறிந்து கொள்ளலாம். ஏதாவது தவறு ஏற்பட்டால் தவறு எப்படி நேர்ந்தது என்பதை அவ்விருவரையும் வினவி அறியலாம்.

(7) என்னிடம் ஒரு பை இருக்கின்றது. ஒரு வகுப்புக் குழந்தைகளே வட்டமாக உட்கார வைத்துக்கொள்க. ஒரு குழந்தை என்னிடம் ஒரு பை இருக்கின்றது என்று சொல்லும். பக்கத்திலிருக்கும் குழந்தை அதில் என்ன இருக்கின்றது ?’ என்று வினவும். முதற்குழந்தை அவல்’