பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயிற்று முறைகள்-(1) 107

என்று கூறும். இம்மாதிரியே இரண்டாவது குழந்தையும் மூன்ருவது குழந்தையும் சொல்லுவர். இரண்டாவது குழந்தை ஆப்பம் என்று சொல்லும். இப்படியே எழுத்து வரிசையில் (அல்லது எப்படியாயினும்) பல சொற்களைக் கூறுவர். குழந்தைகளின் வரிசை முறையில் ஒரு வரிசை முடிந்தவுடன் மீண்டும் ஆட்டம் தொடங்கும். அப்பொழுது புதிய சொற்களைத்தான் கூறவேண்டும்.

(8) சொற்ருெடர் அமைத்தல். பல சொற்களைத் தனித்தனியாகப் பல அட்டைகளில் எழுதுக. அச் சொற்கள் பல சொற்ருெடர்களைச் சேர்ந்தவைகளாக இருக்கவேண்டும். ஒவ்வொரு குழந்தையிடமும் ஒரு அட் டையைக் கொடுத்திடுக. ஏதாவது ஒரு சொற்ருெடரை அனே வரும் கேட்கும்படி படித்திடுக. உடனே அச்சொற்களை வைத்துள்ள குழந்தைகள் விரைவாக முன்வந்து சொற்ருெடரிலுள்ள சொற்களின் வரிசையில் நின்று சொற்ருெடரை அமைத்து நிற்பர். வ்குப்பை இரு பிரிவாகப் பிரித்துக் கொண்டு இரண்டு வகைச் சொற்களைக் கொண்டு இவ்' விளையாட்டை நடத்தலாம். இந்த விளையாட்டை இன்ளுெருவிதமாகவும் மேற்கொள்ளலாம். பல சொற்களைக் கரும்பலகையில் எழுதுக. அந்தச் சொற்களைக் கொண்டு பல்வேறு சொற்ருெடர்களே அமைக்கும்படிப் பயிற்றலாம். அவற்றில் வந்த சொல்லே மீண்டும் மீண்டும் வரலாம்.

(9) ஒவ்வொரு அட்டையிலும் ஒவ்வொரு வினுவாகப் பல அட்டைகளில் எழுதித் தயாராக வைத்துக்கொள்க. வகுப்புக் குழந்தைகள் வருவதற்கு முன்பு அந்த அட்டைகளே வகுப்பில் பல இடங்களில் மறைத்து வைத்திடுக. எப்பொருளைப் பற்றியாயினும் வினுக்கள் இருக்கலாம். குழந்தைகள் வந்தவுடன் அட்டைகளேத் தேடி எடுக்கும்படி செய்க. பிறகு அவர்களே அவரவர் இடத்திலிருக்கும்படி செய்து விளுக்களுக்கு விடை எழுதும்படி செய்க. சரியாக விடையெழுதிய குழந்தை விளையாட்டில் வெற்றியடைந்த தாகக் கருதப்படும். இந்த விளையாட்டை வகுப்பிற்கு வெளியிலும் நடத்தலாம்.