பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

置08 தமிழ் பயிற்றும் முறை

(10) அந்நியனைக் கண்டுபிடி : ஒரே இனத்தைச் சேர்ந்த பல சொற்களடங்கிய பல தொகுதிகளைத் தயார் செய்து கொள்க. ஒவ்வொரு தொகுதியிலும் அந்த இனத் தைச் சேராத ஒரு சொல்லேச் சேர்த்திடுக. குழந்தைகள் இனத்தைச் சேராத சொல்லேக் கீறிட்டுக் காட்டவேண்டும், அல்லது தனியாக எடுத்து எழுதவேண்டும்.

(எ-டு). (அ) காது, கண், முக்கு, நாக்கு, பாக்கு, கை,

- கால் :

(ஆ) கருமை, செம்மை, எருமை, மஞ்சள்,

ஊதா, நீலம், பச்சை :

(இ) பசு, எருது, கழுதை, காக்கை, நாய்

சிங்கம், பன்றி ;

(ஈ) சட்டி, பானை, அகப்பை, கோப்பை,

சைக்கிள், செம்பு, கரண்டி :

(உ) காலை, மதியம், சாமம், நேற்று, மாலை ;

(11) 'கரும்பலகை ஒட்டம்’: ஐந்து கரும்பலகைகளைத் தயார் செய்து கொள்க. ஒரு வகுப்புக் குழந்தைகளே ஐந்து பிரிவுகளாகப் பிரித்திடுக. ஒவ்வொரு கரும்பலகையின் பின் (புறமும் சில சொற்ருெடர்களை எழுதுக. ஒவ்வொரு சொற் ருெடரிலும் ஒரு சில சொற்கள் விடுபட்டிருக்கவேண்டும். விளையாட்டுக்குத் தயார் என்று தெரிந்து குறிப்புக் காட்டிய -வுடன் ஒவ்வொரு பகுதியிலுமுள்ள முதற்குழந்தைகள் ஒவ் வொருவருமாக ஓடி, கரும்பலகையின் பின்னுல் உள்ள சொற் ருெடர்களைப் படித்துவிட்டு முன்புறமாக வந்து விடுபட்டுள்ள சொல்லேக் கரும்பலகையில் எழுதிவிட்டு அவரவர் இடத்தை அடையவேண்டும். அடுத்தபடியாக ஒவ்வொரு பகுதியிலுமுள்ள இரண்டாவது குழந்தைகள் இம்மாதிரி செய்வர். இங்ங்ணம் தொடர்ந்து நடைபெறும். விடுபட்ட எல்லாச் சொற்களையும் முதலில் சரியாக எழுதிய பகுதியைச் சார்ந்த குழந்தைகள் வெற்றியடைந்தவர்கள். எதிர்ச்சொற்கள், ஒருமை-பன்மைச் சொற்கள், ஆண்பால்