பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயிற்று முறைகள்-(1) # O 9

பெண்பால் சொற்கள் முதலியவற்றைக் கொண்டு இதே விளையாட்டை நடத்தலாம்.

(12) ஒரு வகுப்புக் குழந்தைகளே வட்டமாக உட்கார வைத்திடுக. நடுவில் ஒரு குழந்தையை அமர்த்துக. நடுவில் இருக்கும் குழந்தை கையில் ஒரு சிறு பந்தையோ ஒரு காலணு நாணயத்தையோ வைத்துக்கொண்டு வட்டத்தில் நிற்கும் ஒருவரை நோக்கி எறிந்துவிட்டு நிலம், நீர், ' காற்று என்று ஏதாவதொன்றைச் சொல்லவேண்டும். பந்தையோ நாணயத்தையோ வாங்கும் குழந்தை பத்து வினுடிக்குள் மேற் குறிப்பிட்ட மூன்றினுள் ஒன்றில் வாழும் பிராணியின் பெயரைச் சொல்லவேண்டும். நடுவிலுள்ள குழந்தை பத்து எண்ணுவதற்குள் வட்டத்திலிருக்கும் குழந்தை விடை சொல்லாவிட்டாலும் அல்லது தவருகச் சொன்னுலும், உடனே அக்குழந்தை வட்டத்தின் நடுவில் வந்து விடவேண்டும் ; அதுகாறும் வட்டத்தின் நடுவிலிருந்த குழந்தை வட்டத்தை அடையவேண்டும். இவ்வாறு ஆட்டம் தொடர்ந்து நடக்கும். இலக்கணப் பாடத்தில் இவ் விளையாட்டை மிக நன்ருக மேற் கொள்ளலாம். எடுத்துக்காட்டாக வட்டத்தின் நடுவிலுள்ள குழந்தை பெயர்’, ‘வினே’, ‘இடை”, “உரி என்று ஏதாவது ஒன்றைச் சொல்ல, வட்டத்திலுள்ள குழந்தை அதற்கேற்ற சொல்லைக் கூறவேண்டும்.

(18) பிரயாணம் செய்தல் . வட்டமாகக் குழந்தை களே உட்கார வைத்திடுக. ஆசிரியர் : நான் வெளியூருக்குப் பயணம். நான் ஒரு சாத்துக்குடியைக் கொண்டு செல்வேன். முதற் குழந்தை : நான் வெளியூருக்குப் பயணம். நான் ஒரு மாதுளம் பழத்தைக் கொண்டு செல்வேன். இரண்டாவது குழந்தை : நான் கற்பலகையைக் கொண்டு செல்வேன். மூன்ருவது குழந்தை : நான் பொம்மையைக் கொண்டு செல்வேன். இவ்வாறு ஒவ்வொருவரும் ஒவ்வொரு குறிப்பிட்ட பொருளின் பெயரைச் சொல்லவேண்டும். எல்