# 1 O தமிழ் பயிற்றும் முறை
லோரும் சொல்லி முடிந்தவுடன், ஆசிரியர் நான் சாத்துக்குடியைத் தின்பேன்’ என்று சொன்னவுடன் எல்லோரும் ஒவ்வொருவராக அவரவர் கூறிய பொருளே நினைவில் வைத்துக்கொண்டு பொருத்தமான சொற்ருெடர் அமைக்க வேண்டும். சாத்துக்குடி தின்னும் பொருளானதால் ஆசிரியர் சாத்துக்குடியைத் தின்பேன்’ என்று கூறியது பொருத்தமாக அமையும். அதேபோல், கரும்பலகையில் எழுதுவேன்', பொம்மையை வைத்து விளையாடுவேன் என்ற சொற்ருெடர்களே பொருத்தமானவை. குழந்தைகள் விழிப்பாக இராவிட்டால் இரண்டாவது குழந்தை நான் கற்பலகையைத் தின்பேன்’ என்றும், மூன்ருவது குழந்தை *நான் பொம்மையைத் தின்பேன்’ என்றும் சொல்லக்கூடும். இந்த விளையாட்டைத் தொடர்ந்து நடத்தலாம்.
(14) ஒரு வகுப்பிலுள்ள குழந்தைகள் ஒவ்வொரு வருடைய சட்டையிலும் முதுகுப் புறமாக ஒரு பிராணி அல்லது ஒரு பொருளின் பெயர் எழுதிய அட்டையை அல்லது காகிதத்தைப் பொருத்தி வைத்திடுக. அட்டையை வைத்துள்ள குழந்தைக்கு அச்சொல் என்னவென்பது தெரியக்கூடாது. ஒவ்வொருவரும் விளுக்களின் மூலம் பிறரிடமிருந்து தெரிந்து கொள்ளவேண்டும். விடையளிக்கும் குழந்தை ஆம் இல்லே என்பதைத் தவிர வேறு வடிவில் சொல்லக்கூடாது. ஒரு வகுப்பைச் சிறு சிறு குழுக்களாகப் (Teams) பிரித்துக்கொண்டு இவ்விளையாட்டை நடத்தலாம்.
(15) கதை அமைத்தல்: ஒரு கதையில் முதல் வாக்கியத்தைச் சொல்லுக. குழந்தைகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வாக்கியமாகச் சொல்லிக் கதையை முடிப்பர். சில சமயம், கதையின் முற்பாதியைக் கூறி பிற்பாதியைக் குழந்தைகளைக் கொண்டு முடிக்கும்படி செய்யலாம்.
(16) அஞ்சல் விளையாட்டு : மாணுக்கர் முகவரி எழுதிய அட்டைகளே அந்தந்த மாணுக்கனிடம் கொடுக்கச்