பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 14 தமிழ் பயிற்றும் முறை

(ஊ) எழுத்துச் சுருக்கம் : ஒரு நீண்ட சொல்லிலிருக்கும் எழுத்துக்களைக் கையாண்டு வேறு சில சிறு சொற்களே ஆக்கலாம். - (எ-டு) வீர சுதந்திரம்-வீரம், சுரம், திரம், தரம், ரதம், வீதி, சுதி, ததி, ரதி, வீசு, வீசும், வீதம், தந்திரம் முதலியன. (எ) எழுத்துப் பெருக்கம் : ப...... ம், இதில் முறையே ஒன்று, இரண்டு, மூன்று......எழுத்துக்களைப் பெய்து

சொல்லாக்கல். سم (எ-டு) படம், பவழம், பரவசம் முதலியவை. (ஏ) மோனே அமைத்தல் : மோனே என்பது முதல் எழுத்து ஒரே எழுத்தாக, அல்லது இன எழுத்தாக

இருத்தல். (எ-டு) பாட்டி படுத்த பாயைப் பார்’ என்பது போன்றவை. (ஐ) எதுகை அமைத்தல் : எதுகை என்பது முதல் எழுத்து மாத்திரை அளவில் ஒத்து நிற்க, பிற எழுத்துக்கள் ஒசையில் ஒன்று படலாம். (எ-டு) பாட்டி வீட்டில் பாட்டுக் கேட்டு இருந்தேன் : என்பது போன்றவை. - (ஒ) இயைபு என்னும் அழகுடன் சொற்ருெடர் முடித்தல்.

(எ-டு)

அப்பா தந்தார் துட்டு வாங்கினேன் நான் லட்டு நாம் தின்று விட்டு போவோம் புறப் பட்டு

என்பது போன்றவை.

(ஓ) ஒர் எழுத்து மாற்றம் : கொடுத்துள்ள ஒரு சொல்லில் ஒர் எழுத்தை மட்டிலும் மாற்றி வேருெரு சொல்லை உண்டாக்குதல்.

(எ-டு) குடம்-படம், குலம், குடல் போன்றவை.