பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயிற்று முறைகள்:-(1) 115

(4) வரிசைப்படுத்தல் : மாறி உள்ள எழுத்துக்களை அல்லது சொற்களை வரிசைப்படுத்தச் செய்தல்.

o (அ) அம்மா, இலே, ஆடு, ஒளுன், ஊசி, எலி, உரல், ஈரம், ஏணி, ஒட்டகம் போன்ற சொற்களை எழுத்து வரிசையில் சொல்லச் செய்தல் அல்லது.எழுதச் செய்தல்.

(ஆ) மாறி உள்ள எழுத்துக்களைச் சொல்லாக்கச் செய்தல்.

(எ-டு) த, ம்,’ப, சி, ர, ம்=சிதம்பரம் போன்றவை.

(இ) முறைமாறி எழுதிய சில சொற்ருெடர்களில் உள்ள சொற்களை முறையாக வரிசைப்படுத்திச் சரியான சொற்ருெடர்களை உண்டாக்கச் செய்யலாம்.

(எ-டு) என்று ஓர் இருக்கின்றது ஊர் காரைக்குடி. - காரைக்குடி என்று ஒர் ஊர் இருக்கின்றது. இம்மாதிரி இட்டலி குடித்தான் நீர் மோர் தின்று, புல் :பசித்தால் புலிதின்னுமா?’, பேசுவது மொழி நாம் தமிழ்’

என்பவற்றைச் சரியாக எழுதச் செய்யலாம்.

(5) சரி-தப்பு: ஒரு வினவும் அதன் கீழே விடையுமாக எழுதுக. விடை சரியாக இருந்தால் அதன் கீழே குழந்தைகள் சரி என்றும், தவருக இருந்தால் தவறு : என்றும் எழுதவேண்டும். -

(எ-டு) நீ பள்ளிக்கு ஏன் செல்லுகின்ருய்?

நான் பள்ளிக்கு விளையாடப் போகின்றேன். செவ்வாய்க்கிழமைக்கு அடுத்த கிழமை என்ன ? செவ்வாய்க்கிழமைக்கு அடுத்தது புதன்கிழமை. இம்மாதிரி அறிவுக்கும் திறனுக்கும் தக்கவாறு குழந்தைகளின் அறிவு நிலையை யொட்டிப் பல சொற்ருெடர்களே அமைக்கலாம்.

(6) பொருத்தமான சொற்கள் அமைத்தல் : ஒரு சொற்ருெடரில் ஒரு சொல் இருக்கவேண்டிய இடத்தைக்