பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயிற்று முறைகள்-(1) 1 1 7

லாகப் படிப்பது மட்டிலும் போதாது ; அந் நிகழ்ச்சிகள் பள்ளிகளிலேயே நடைபெறச் செய்தும் காட்டப் பெறுதல் வேண்டும். பள்ளியில் மானுக்கர்களே ஒரு செயலைத் தேர்ந் தெடுத்து இயற்கையான முறையில் அதை முற்ற முடியக் கொண்டு செலுத்துவதைத்தான் செயல் திட்ட முறை என்று கூறுகின்றனர். இந்த முறையில் பள்ளி நடைமுறை, கல்வித் திட்டம், பாடத் திட்டங்கள் ஆகியவை யாவும் குழந்தையை நடுவாக . வைத்தே மேற்கொள்ளப்படுகின்றன. தானகவே ஒரு செயலேத் தேர்ந்தெடுத்து, தானகவே அதைச் செய்து முடித்து, தானுகவே அதன் பயனேக் கண்டு மகிழ்தலே இம் முறையின் அடிப்படை என்று கூறலாம். இம் முறை விளையாட்டு முறையை அடிப்படையாகக் கொண்டது.

அறிஞர்களின கருத்து: டாக்டர் கில்பாட்ரிக் என்னும் பேராசிரியர், பள்ளியில் ஒரே தகுதியுடைய குழந்தைகள் ஒரு வகுப்பில் கூடியிருக்குங்கால் ஒருமனத்துடன் ஒரு செயலே அல்லது வேலையைத் தம் நோக்கத்திேைலயே தேர்ந்தெடுத்து அதன் மேலேயே கண்ணும் கருத்துமாயிருந்து செய்துகொண்டு வரும்பொழுதே அதன் வாயிலாய் முழு மனிதர்களாவதற்கு வேண்டிய முழுக் கல்வியையும் ஆசிரியர் உதவியைக் கொண்டு வளர்த்துக் கொள்வதே செயல் திட்ட முறையின் வாயிலாகக் கற்கும் கல்வியாகும்” என்று கூறுகின்றர். ஸ்டீவென்ஸன் என்ற கல்வி நிபுணரும், , குழந்தைகள் தம் நோக்கமாய் ஒரு செயலே ஆற்றும்பொழுது அதை முற்றும் முடியக் கொண்டுசெலுத்தி இடம் பொருள் ஏவல் ஆகிய மூன்றையும் தக்க முறையில் தழுவிக்கொண்டு எதை எந்த இடத்தில் எப்படிச்செய்தால் வெற்றியடையலாம் என்பதை அறிந்து, அதை முடிவு பெறச் செய்யவேண்டும்’ என்று வலியுறுத்துகின்ருர். குழந்தைகளுக்குச் செயல் தம்முடையது என்ற உணர்ச்சி ஏற்பட்டால்தான் அவர்கள் அதை முழுப் பொறுப்புடன் நிறைவேற்றி முழுப்பயனேயும் எய்துவர்.