பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 18 தமிழ் பயிற்றும் முறை

இம் முறையின் படிகள் : இந்த முறையில் நான்கு படிகள் உள. முதலாவது : நோக்கம். மாணுக்கர்களே தங்கள் திறமைக்கும் நிலமைக்கும் பொருத்தமான ஒரு செயலைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுவர். ஆசிரியரின் கட்டாயமின்றியே இது தேர்ந்தெடுக்கப்பெறும். பட்டறிவில் குறைவுள்ள மாணுக்கர்களுக்குப் பல பொருள்களில் யோசனை கூறி, பயனுள்ள செயலைத் தேர்ந்தெடுக்கும்படி செய்யலாம். இரண்டாவது : திட்டமிடல். ஆசிரியர் வழிகாட்ட மாணுக்கர்களே அச்செயலைத் திறனுடன் முடிக்கும் வழிமுறைகளை ஆராய்வர். ஒவ்வொரு விவரத்தையும் வரிசையாகக் குறித்து வைத்துக் கொள்ளும்படி செய்யவேண்டும். ஒவ்வொன்றையும் குறித்து வைத்துக் கொண்டால்தான் செயல் விரைவாக முடியும்; செய்திகள் தெளிவாக விளங்கும் ; குறைந்த காலத்தில் நிறைந்த பயனே எய்தவும் முடியும். மூன்ருவது செய்து முடித்தல். இதுதான் மானுக்கர்களுக்கு உற்சாகத்தை அளிப்பது ; இதில் காலமும் ஆற்றலும் வீனகாமல், கண்காணித்து வருவது ஆசிரியர் கடமையாகும் ; செயலிலிருந்து வழி விலகிப் போகாது பார்த்துக் கொள்ளவேண்டும். திட்டத்தின் ஒவ்வொரு குறிப்பும் கவனிக்கப்படுகின்றதா என்பதை விழிப் புடன் கவனிக்கவேண்டும். திட்டம் செயற்படுங்கால் ஆசிரியர் நண்பன்போல கூட இருந்து யோசனைகளைக் கூறவேண்டுமேயன்றி, எதையும் கட்டாயப்படுத்துதல் கூடாது. எதையும் திருப்பதி மொட்டை போல் செய்து விடாது ஒரேசமயத்தில் முற்றமுடியக் கொண்டுசெலுத்த வேண்டும் என்பதைக் கற்பிக்கவேண்டும். நான்காவது : சீர்தூக்கல் அல்லது மதிப்பிடல். இதிலும் ஆசிரியர் தலையிடக் கூடாது. மாணுக்கர்களைக் கொண்டே திறயைச் செய்தல் வேண்டும். இதுதான் நல்ல பயனேயளிக்கும். நடைமுறையில் நேரிட்ட தவறுகளையும், முடிவின் பயன்களையும் நன்ருக ஆராயலாம். சுருங்கக் கூறின், இந்த நான்கு படிகளையும்,

தேர்ந்தெடுத்துத் திட்டமிட்டுச் செய்ததற்பின் சீர்தூக்கி ஆய்ந்தறிதல் நாற்படிகள் ஆம்.