பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயிற்று முறைகள்-(1) 1.21

ளிடையே படைப்பாற்றல் நன்கு வளர்கின்றது. சொன்ன தைச்சொல்லும் கிளிப்பிள்ளைப் படிப்புக்கு இங்கு இடமில்லை; மாணுக்கர்கள் செய்ம்முறையிலேயே கல்வி கற்கின்றனர். சுறுசுறுப்பு, காய்தல் உவத்தலின்றி உண்மை கானும் ஆவல், பிறர் கருத்துக்கு மதிப்புக்கொடுத்தல், களங்கமற்ற மனப்பான்மை முதலிய பண்புகள் இம்முறையால் வளர இடமுண்டு. நாளுக்கு நாள் மாறிவரும் உலக நாகரிகத்திற் கேற்றவாறு மாறிவரும் கல்விநோக்கம், படிப்பு முறைகள், கல்வித் திட்டம், பாடத்திட்டம், தேர்வுகள் முதலியவற்றிற் கெல்லாம் இம்முறை ஏற்ற முறையில் வளைந்து கொடுக்கும் தன்மையைப் பெற்றுள்ளது.

குறைகள் : இம்முறையில் சில குறைகளும் காட்டப்பெறுகின்றன. எல்லாப் பாடங்களையும் ஓர் ஒழுங்கில் கற்பிக்க இயலாது; ஒழுங்காகக் கற்பிக்க வாய்ப்புக்களே உண்டாக்குவதும் கடினம். இதனுல் இம் முறையை மேற்கொள்ள ஆசிரியர்கள் பின்வாங்குகின்றனர். தொடக்க நிலைக் கல்வி முடிந்தவுடன் ஒவ்வொரு மாணுக்கனுக்கும் ஒவ்வொரு பாடத்திலும் ஓரளவு தேர்ச்சியாவது கைவரப் பெற்றிருக்கவேண்டும். ஆனல், அஃது இம் முறையால் ஏற்படுகின்றது என்று உறுதியாகக் கூற இயலாது. செயல் திட்ட வேலைக்குப் புறம்பாகக் கற்கும் ஒரு திட்டத்தையும் இத்துடன் இணைத்துக்கொண்டால் கற்றல் ஒழுங்குடனும், தொடர்ச்சியின்றிக் காணப்படும் பிளவுகளின்றியும் நடைபெறும். தொடக்கநிலைப் பள்ளிக்கால அள்வில் கற்கக்கூடியவற்றை அதே காலத்தில் இம் முறையின் வாயிலாகக் கற்கமுடியும் என்று சொல்வதற்கில்லை. குறிப்பிட்ட வேலையைத் திட்டமிட்டபடி குறிப்பிட்ட கால அளவில் முடிக்கக்கூடும் என்று சொல்ல இயலாது. இம் முறையில் மாணுக்கர்களாகவே வேலைகளைத் தேர்ந்தெடுத்தலும் அருமை. ; தேர்ந்தெடுத்த பிறகு வேலே செயற்படும்பொழுது அவர்களிடையே ஒழுங்கை நிறுவுவதும் சிரமம். வறுமை மிக்க நமது நாட்டில் மிகுந்த பணச்செலவில் ஒவ்வொரு பள்ளியிலும் இம்முறையை மேற்.