உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 தமிழ் பயிற்றும் முறை

கொள்ள இயலாது. ஆனல், இது முறையின் நேர்முகமான குறையாகாது. இம் முறையில் நடைபெறும் ஒரு சில பள்ளிகள் நம் நாட்டில் உள்ளன. அவற்றில் பணியாற்றிப் பட்டறிவுவல்ல ஆசிரியர்களும் இம்முறையின் மேனுட்டு வல்லுநர்களும் அக்குறைகளே யெல்லாம் எளிதாகக் களைந்து இம் முறையை மிகவும் முற்போக்குடையதாக ஆக்கலாம் என்று உறுதி கூறுகின்றனர். தொடக்கநிலைப் பள்ளிகளில் இம்முறையை ஒரளவு அதிகச் செலவின்றி மேற்கொள்ளலாம்.

4. வார்தா கல்விமுறை

வார்தா கல்விமுறையைத் தொழில் முறைக கல்வி

என்றும் செய்ம்முறைக் கல்வி என்றும் கூறலாம். இத் திட்டத்தை நம் நாட்டுத் தந்தை காந்தியடிகள் மத்தியப் பிரதேசத்திலுள்ள வார்தா என்ற ஊரில் முதன் முதலாகத் தொடங்கியதால் அதற்கு அப்பெயர் ஏற்பட்டது. 1987ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற கல்வி மாநாட்டின் தீர்மானத்தை யொட்டி அத் திட்டம் தயார் செய்யப்பட்டு ஜாகீர் ஹாலைன் கமிட்டியாரால் உருவம் கொடுக்கப் பெற்றுத் திருத்தியமைக்கப் பெற்றது. நம் நாட்டின் பண்பாட்டையும் தேவைகளையும் ஒட்டி அத் திட்டம் உருவாக்கப் பெற்றுள்ளது. நூற்றைம்பது ஆண்டுகளாக ஒரு சிலருக்காக என்றே தயாரிக்கப்பெற்ற கல்வித்திட்டம் போலன்றி, நாட்டு மக்கள் அனைவருக்குமே பயன்படும்படியாக இத் திட்டம் தயாரிக்கப்பெற்றுள்ளது. காந்தியடிகளின் கைவண்ணத்தையும் கருந்து வண்ணத்தையும் இத் திட்டத்தில் காணலாம்.

இம் முறையின் முக்கியக் கூறுகள் : பயன் படத்தக்க ஏதாவது ஒரு கைத்தொழிலே மையமாக வைத்துக்கொண்டு அதைச் சுற்றியே தேவையான பிற பாடங்களைக் கற்பித்தல் இம்முறையின் முக்கிய நோக்கமாகும். இங்கு, கைத்தொழிலப் பொறி இயங்குவதுபோல் கற்பிப்பது இல்லை :