பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 24 தமிழ் பயிற்றும் முறை

தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஐந்தாம் வகுப்புவரை ஆண் பிள்ளைகளுக்கும் பெண் பிள்ளைகளுக்கும் ஒரே பாடத்திட்டம்தான் உண்டு : 6, 7 வகுப்புக்களில் திட்டத்தில் சிறிது மாற்றம் உண்டு. பெண் பிள்ளைகளுக்கு குடும்ப அறிவியல் பாடமாகச் சேர்க்கப்பெற்றுள்ளது. அடியிற் கண்டவாறு ஒரு நாளின் பாட வேளைப்பட்டி அமையும்.

கைத்தொழில் 8 மணி 20 மணித்துளிகள் இசை, ஓவியம், கணக்கு 40 3 * தாய்மொழி 40 3 * அறிவியல், சமூகம் 30 密黎 உடற்பயிற்சி 1 O 9; ஒய்வு 1 O 労y

மொத்தம் 5 மணி 30 மணித்துளிகள்

இன்றைய கல்வித்திட்டத்தில் காணப்பெறும் தேர்வு முறையை அத் திட்டம் ஆதரிக்கவில்லை; அதை அடியோடு நீக்கிவிட விரும்புகின்றது. அதற்குப் பதிலாக அடிக்கடி சரிபார்த்தல், புறநிலைப் பயனறி ஆய்வுகள் (Objective achievement tests), மாணுக்கரின் பதிவுப் புத்தகங்கள், சிற்றுார் மக்களுக்கு மாணுக்கர் செய்த சமூகத்தொண்டு ஆகியவற்றைக் கொண்டு அவர்களைத் தேறலாம் என்று யோசனை கூறப்பெற்றுள்ளது. கல்விக் குழுவினர் கல்வி பற்றிய ஏற்பாடு, புறநிலை ஆய்வுகள், முன்னேற்றப் பயிற்று முறைகள் முதலியவற்றில் அடிக்கடி புதுப்பிக்கும் ஆராய்ச்சி 6 J(5til 156ir (Refresher courses) [5L-35 sobéffiufosfsir அறிவைப் பெருக்குவர். பள்ளிகளே மேற்பார்வை பார்த்துக் கண்காணிக்க மேற்பார்வையாளர்களேயும் பரிந்துரைத்துள்உளனர். இவர்கள் இன்றுள்ள கல்வித்துறைக் கண்காணிப்.பாளர்கள் போலல்லாது, ஆசிரியர்களுக்கு நடைமுறையில் துணை புரிவரேயன்றி, பள்ளி ஆட்சியில் அதிகமாகத் தலையிடார்.