பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயிற்று முறைகள்-(1) 125

இத் திட்டம் வெற்றியுடன் செயற்படவேண்டுமாளுல் ஆசிரியர்கள்தாம் பொறுப்புடன் பணியாற்றவேண்டும் என்பதை இத் திட்டத்தை வகுத்தவர்கள் உணர்ந்துள்ளனர். பணியாற்றும் ஆசிரியர்கள் அறிவு, திறமை, உற்சாகம், நாட்டுப்பற்று ஆகிய பண்புகளுடன் தனிப் பயிற்சியும் பெற்றிருக்க வேண்டும். முதல்நிலை (Senior) இரண்டாம் நிலை (junior) என்ற இரண்டு நிலை ஆசிரியர் பயிற்சியையும்பற்றி இத் திட்டம் குறிப்பிடுகின்றது. இத்தகைய பயிற்றுமுறை இன்று டில்லி, ஆஜ்மீர், ரீநகர், வார்தா, நாகபுரி, அலகாபாத், பூணு, மசூலிப்பட்டினம் ஆகிய இடங்களிலும் வேறு பல இடங்களிலும் அளிக்கப்பட்டு வருகின்றது.

1945-ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் வார்தாவில் நடைபெற்ற தேசீயக் கல்வி மாநாட்டின் விளைவாக இக் கல்வித் திட்டம் சிறந்த கவனத்தைப் பெற்றுள்ளது. எனவே, இத் திட்டத்தில் இன்று பள்ளி வருவதற்கு முன் குழந்தைகள் கவனம் பெற வேண்டிய தொடக்கமுன் நிலை, தொடக்க நிலே, தொடக்கப் பின்நிலை, வளர்ந்தோர் நிலை, (Pre-basic, Basic Post-basic and Adult) 6T65, p. brsārg, நிலைகள் உள்ளன. ஏழாண்டுகள்வரை குழந்தைகள் குழந்: தைப் பள்ளிகளில் (Nursery schools) உடல், உள, சமூக வளர்ச்சிகளில் கவனிக்கப் பெறுவர். தொடக்கப் பின்நிலைக் கல்வியைப்பற்றிய விரிவான திட்டம் இன்னும் வகுக்கப் பெறவில்லை. எனினும், அத்திட்டம் கிராமப் புனர் அமைப்புப்பற்றி இருக்கும் என்றும், அவ்வேலை உழவுத் தொழில், பால்பண்ணே, கட்டிடவேலை, உலோக வேலை, தச்சுவேலே, நெசவு, வீட்டு ஆட்சி முதலிய துறைகள் வாயிலாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்பெறுகின்றது. அதற்குப் பயிற்சி அளிக்க வேண்டிய கல்லூரிகள் டென்மார்க் நாட்டில் நிறுவப்பெற்றிருக்கும் மக்கள் கல்லூரிகளின் அடிப்படையை யொட்டி நிறுவப்பெறும் என்றும் எதிர்பார்க்கப் பெறுகின்றது. அத்தகைய கல்லூரி யொன்று டில்லிக் கருகிலுள்ள நாட்டுப்புறத்தில் நிறுவப்