பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 தமிழ் பயிற்றும் முறை

பெற்றிருக்கின்றது. ஐக்கிய நாட்டு அவையின் ஆதரவில் அனுப்பப்பெற்ற கல்வி நிபுணர்கள் இங்குப் பணியாற்றி வருகின்றனர். சிறிதுகாலம் நடைமுறையிலிருந்து தற்காலிக.மாக நிறுத்திவைக்கப் பெற்றிருக்கும் வளர்ந்தோர் கல்வித் திட்டத்திலும் வார்தாக் கல்வித்திட்டம்தான் அடிப்படை.யாகக் கொள்ளப்பெற்றிருந்தது.

இத்திட்டத்தின் கிறைகள் : திட்டத்தைக் கூர்ந்து நோக்கிளுல் அது நவீன கல்வி முறையினையும் உளவியற் கொள்கைகளேயும் ஒட்டி அமைக்கப் பெற்றுள்ளது என்பதும், நமது நாட்டின் சமூக, பண்பாட்டு, அரசியல், பொருளாதார நிலைகளே யொட்டித் திட்டம் உருவாக்கப் பெற்றுள்ளது என்பதும் தெரியவரும். உளவியற்படி பாடங்கள் கற்பிக்கப்பெறுகின்றன. செய்ம்முறைக் கல்வியினல் புலன்களுக்குப் பயிற்சி பெறும் வாய்ப்பு உள்ளது. கைத்தொழில் மூலம் கல்வி பெறும்பொழுது மானுக்கர்களிடம் திட்டம் போடும் முறை, ஆய்வுகள் செய்யும் முறை, சிந்தனே முதலிய பண்புகள் வளர்கின்றன; ஆக்கும் இயல்பூக்கம் நல்ல பயிற்சியைப் பெறவும், குழந்தை முழு ஆளுமையுடன் வளரவும் வாய்ப்புக்கள் கிடைக்கின்றன. நவீன பயிற்றுமுறைகளே இயாட்டிக் கற்பிக்கும் முறை அமைந்துள்ளது. காந்தியடிகளின் கருத்துப்படி குழந்தைகள் உடல், உள்ள, ஆன்ம வளர்ச்சி பெற இத் திட்டம் மிகவும் துணைபுரிகின்றது. திறமையுடன் கையாண்டால் இத் திட்டம் கிராமப் புனரமைப்பிற்கும், வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்கவும், ஓய்வு நேரங்களைப் பயனுள்ள முறைகளில் கழிக்கவும், தொழிலாளர்களின் உற்பத்தித் திறனே வளர்க்கவும் துணைசெய்யக் கூடும். உடல்வேலேக்கும் முனவேலைக்கும் தொடர்பு ஏற்படுத்தி உடலுழைப்பிற்குப் பெருமையுண்டு என்ற மனப்பான்மையையும் ஏற்படுத்துகின்றது. நவ இந்தியாவில் நல்ல குடிமகனுக்கு வேண்டிய ஆண்புகளையெல்லாம் வளர்க்கத் துணைபுரிகின்றது இத்

- قاساتالي.