பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயிற்று முறைகள் (1) 1 27

குறைகள் : இக் கல்விமுறையில் சில குறைகளும் காட்டப்பெறுகின்றன. ஆசிரியர் வாழ்க்கைக்காக மாணுக்கர் உழைக்கின்ற்னர் என்ற எண்ணம் விரும்பத்தக்கதாக இல்லை. இஃது இத் திட்டத்தையே கீழ்நிலைக்குக்கொண்டு வருகிறது என்ற கருத்தை நிலவச் செய்கின்றது. பயனேக் கருதிச் செலவிடப்பெறும் தொகைக்கு ஏற்றவாறு வருவாயை எதிர்பார்க்க முடியாது. அன்றியும், குழந்தைகள் உற்பத்தி செய்யும் பொருள்கள் பொறி உற்பத்திப் பொருள்களுடன் போட்டி போட்டு, சந்தையில் விற்பனையாகும் என்று சொல்வதற்கில்லை. வேறு பண்புகளையெல்லாம் மறந்து கைத்தொழில் மனப்பான்மைக்கு மட்டிலும் முக்கியத்துவம் அளிக்கிறது. இம்முறை என்று கூறப்படுகின்றது. கைத்தொழில் மூலம் கல்வி பயிற்றப்படுகின்றதே யன்றி, கைத்தொழில் ஒரு தொழில்போல் கற்பிக்கப்பெறவில்லே என்பதை உணர்ந்தால் இக் குறையினைக் கூருர் ; பண்பாட்டை வளர்க்கும் இலக்கியம், சமூக இயல் போன்ற பாடங் களும் இம்முறைக் கல்வித் திட்டத்தில் இடம் பெற்றுள்ளன. பொறிகள் பல்கியுள்ள இக்காலத்திற் கேற்றவாறு இக் கல்வி. முறை அமையவில்லை. தொழில் நுணுக்க வளர்ச்சிக்கு இக் கல்விமுறை துணைபுரியாதிருப்பதுடன் தடையாகவும் இருக்கின்றது. இஃது எல்லாப் பாடங்களையும் இயற்கையான முறையில் தொடர்புபடுத்திக் கற்கும் வாய்ப்புக்களை நல்கவில்லை ; திறமையுடன் கையாண்டால் இக் குறையை நீக்கலாம். இம் முறையில் கல்வி பயிலும் மாணுக்கர்கள் பிறமுறையில் கற்பிக்கப்பெறும் பள்ளிகளுக்கு மாற வசதிகள் இல்லை. நடைமுறைக் கல்வித் திட்டத்தில் குறைகளிருப்பினும் அதை அடியோடு நீக்கிவிட முடியாது. தக்க பாடப்புத்தகங்கள் இல்லாததால் ஒவ்வொரு ஆசிரியரும் அவரவர் மனப்பான்மைக் கேற்றவாறு கருத்துக்களைத் திணிக்கக் கூடும். இம் முறை உலக மொழியாகிய ஆங்கிலத்துக்கு இடந்தரவில்லை. இஃது ஈடு செய்ய முடியாத பெருங் குறை யாகும். உடற் பயிற்சி, குழந்தைகளின் விளையாட்டுணர்ச்சி, சமயப்பாடம், புதிய முறைத் தேர்வுகள் முதலியவற்றை இத்திட்டம் புறக்கணிக்கின்றது. இத் திட்டம் விரும்பும்