பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 தமிழ் பயிற்றும் முறை

ஆசிரியர்களை உண்டாக்குவதும் கடினம். அதுவும் இத் திட்டம் குறிப்பிடும் குறைந்த ஊதியத்தைப் பார்த்து உற்சாகமுள்ள இளைஞர்கள் கல்வித்துறையில் பணிபுரிவதையே விரும்பார்.

5. நடிப்பு முறை

நடிப்புமுறை விளையாட்டுமுறையை அடிப்படையாகக் கொண்டது; மனத்தின் ஆற்றல்களில் முக்கியமானதாகிய கற்பனையின் விளைவாக நடைபெறுவது. கற்பனை ஊற்றுப் பெருக்கு இன்றேல், எந்தக் கலையும் வளர்ச்சிபெற இயலாது. கற்பனை பயிற்றலால்தான் குழந்தைகள் அரிதான செயல்களே எளிதாக நிறைவேற்றுகின்றனர்; ஊனக் கண்ணுல் காணமுடியாதனவற்றையெல்லாம் மனக்கண்ளுல் காண்கின்றனர் ; முன்னர்க் கண்டவற்றைத் திரும்பவும் நினைத்துப் பார்க்கின்றனர். குழந்தைகளின் விளேயாட்டு உலகில் உண்மைக்கும் பாவனைக்கும் அதிக வேற்றுமை இல்லை. பாவனையின் ஆற்றல் எல்லையற்றது. குழந்தைகளின் பாவனை உலகில் ஒரு சிறுகழி மோட்டாராகும் ; மரக் கட்டைகள் வண்டிகளாகும் ; நாற்காலி கப்பலாகும் ; ஊஞ்சல் புகை வண்டியாகும். குழந்தைகள் பெற்ருேராகவும், ஆசிரியராகவும், அரசனுகவும், ஆண்டியாகவும், கடைக்காரணுகவும், பாற் காரணுகவும், வண்டி ஒட்டியாகவும் நடிப்பதில் பேரின்பம் அடைகின்றனர். சாதாரணமாக வீடுகளில் ஆண் குழந்தைகள் இவ்வாறு நடிப்பதையும், பெண் குழந்தைகள் சிறு சோறு சமைத்தல், சிற்றில் புனேதல், பொம்மைத் திருமணம் போன்ற விளையாட்டுக்களில் ஈடுபடுவதையும் காண்கின்ருேம்.

ஆசிரியர்க்குச் சில குறிப்புக்கள் : குழந்தைகளிடம் காணப்பெறும் இந்த நடிப்பு உணர்ச்சியைப் பயனுள்ள வழிகளில் திருப்புவதுதான் ஆசிரியரின் கடமை; அதில்தான் அவர் திறமை நன்கு புலணுகும். தமிழ் கற்பிப்பதில் வாய்மொழிப் பயிற்சி, எழுத்து ஆகிய இரண்டிற்கும்