பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயிற்று முறைகள்-(1) 129

வகுப்பில் நடிப்பதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். குழந்தைகளிடம் ஒரு திருத்தமான நாடகத்தை எதிர்பார்க்க வேண்டியதில்லே ; எதிர்பார்த்தலும் தவறு. நாடகத்தை உருவாக்கல், நாடகத்திற்கு வேண்டிய பாட்டுக்கள் பேச்சுக்கள் தயாரித்தல், நடிகர்களேத் தீர்மானித்தல், நடிகர்கட்கு வேண்டிய ஆடைகள் தயாரித்தல், ஒத்திகை வைத்தல் ஆகிய செயல்களால்தான் இம்முறையின் முழுப் பயனையும் எய்தமுடியும். பொது மக்களுக்கு நாடகத்தை நடித்துக் காட்டவேண்டுமென்று நோக்கமிருந்தாலும், மேற்கண்ட செயல்களின் மூலந்தான் குழந்தைகள் நிறைந்த பட்டறிவைப் பெறுகின்றனர் என்பதை ஆசிரியர்கள் என்றும் நினேவில் வைத்துக் கொள்ளவேண்டும். சிறு குழந்தைகளைக் கொண்டு அடிக்கடி வளர்ந்தவர்கள் முன்னுல் நடிக்கச் செய்வதும் சிறந்ததன்று. வேண்டுமானுல் தம் வயதுள்ள பார்வையாளர்கள் முன்னர் நடிக்க ஏற்பாடுகள் செய்யலாம். வளர்ந்தவர்களுக்கு முன் நடிக்கப் போகின்ருேம் ”, என்ற நினைவையே குழந்தைகளிடம் எழச்செய்வது தவறு.

சிறு குழந்தைகள் நடிப்பதற்குத் தேர்ந்தெடுக்கப்பெறும் கதைகள் மிகவும் எளியனவாக இருக்கவேண்டும் ; விரிவான அரங்கு அமைப்பில் நடிக்கக் கூடியவையாகத்தான் இருத்தல் வேண்டும் என்பதில்லை. குழந்தைகள் தாமாக விளையாடுவதைக் கூர்ந்து கவனித்தால் எத்தகைய கதைகள் அவர்கள் நடிப்பதற்கு உகந்தவை என்பது தெரிய வரும். ஓநாயும் ஆட்டுக்குட்டியும் , சிங்கமும் சுண்டெலியும் , சீசீ இந்தப் பழம் புளிக்கும்,”, நரியும் காக்கையும்,', ' குரங்கும் பூனைகளும் என்பன போன்ற சாதாரணக் கதைகளே குழந்தைகள் நடிப்பதற்குத் தகுதியான நிகழ்ச்சிகளைத் தரும். ஈசோப் கதைகளையும் பஞ்ச தந்திரக் கதைகளையும் சிறந்த முறையில் சிறு குழந்தைகளின் நடிப்பிற்குப் பயன்படுத்தலாம். முக்கியமாக ஆசிரியர் கவனிக்க வேண்டியது இது : குழந்தைகளுக்காகத் தேர்ந்தெடுக்கப்பெறும் கதைகள் அவர்கள் பட்டறிவை ஒட்டி

த-10